News January 2, 2026
மீண்டும் புயல் சின்னம்.. கனமழை வெளுத்து வாங்கும்

கடந்த 2 நாள்களாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில், தென்மேற்கு வங்கக் கடலில் ஜன.6-ம் தேதியை ஒட்டி புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) உருவாகக்கூடும் என IMD தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, இன்று நீலகிரி, கோவை, தென்காசி, தேனி மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News January 30, 2026
துணை முதல்வராகிறாரா அஜித் பவாரின் மனைவி?

அஜித்பவார் விமான விபத்தில் இறந்ததை தொடர்ந்து, அவர் வகித்த DCM பதவிக்கு யாரை தேர்ந்தெடுப்பது என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், அஜித் பவாரின் மனைவியும், MP-யுமான சுனேத்ரா பவார், DCM-ஆக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்சியின் மூத்த தலைவர்களின் கோரிக்கையை சுனேத்ரா ஏற்றுக் கொண்டதாகவும், மறைந்த அஜித் பவாரின் பாராமதி தொகுதி இடைத்தேர்தலிலும் போட்டியிட முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
News January 30, 2026
காங்., தனித்து போட்டியிட முடியாது: கார்த்தி சிதம்பரம்

தமிழ்நாட்டில் தனித்து தேர்தலை எதிர்கொள்ளும் நிலையில் காங்கிரஸ் கட்சி இல்லை என்று கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார். மேலும், காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும்போது சிறுபான்மையினர் பாதுகாப்பாக உணர்கிறார்கள்; திமுக தலைமையிலான கூட்டணிக்கு காங்., ஒரு மதச்சார்பற்ற தோற்றத்தை அளிக்கிறது என தனியார் டிவி நிகழ்ச்சியில் கூறிய அவர், பின்புற வாசல் வழியாக அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்துள்ளதாகவும் விமர்சித்தார்.
News January 30, 2026
குழந்தைகளிடம் இதை கண்டுக்காம இருந்துடாதீங்க!

பெற்றோர்களே, உங்கள் குழந்தை ஓவர் சுட்டித்தனமாக, ஹைப்பர் ஆக்டிவாக இருக்கிறார்களா? அவர்களை, மனநல (அ) குழந்தைகள் நல டாக்டரிடம் அழைத்துச் செல்வது நல்லது. மனநல டாக்டரிடம் ஆலோசனை பெறுவதை அவமானமாக நினைக்கவேண்டாம். அது ஒரு சாதாரண விஷயம்தான். எனவே அலட்சியமாக இருந்து உங்கள் குழந்தையின் மனநலத்தை கண்டுகொள்ளாமல் விட்டுவிடாதீர்கள். விழிப்புணர்வுக்காக அனைவருக்கும் SHARE THIS.


