News January 2, 2026

மதுரை: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்

image

மதுரை மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள் (ம) அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987-94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE பண்ணுங்க!

Similar News

News January 18, 2026

சமயநல்லூர் அருகே விபத்தில் 20 பேர் காயம்

image

சமயநல்லூர் அருகே மூலக்குறிச்சியை சேர்ந்த உட்பட 40-க்கும் மேற்பட்டோர் பாலமாட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை காண சென்றனர். பின்னர் சரக்கு வாகனத்தில் ஊர் திரும்பிய போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து செல்லனகவுண்டன்பட்டி ஆற்றுக்கால்வய் கரையில் கவிந்தது. இதில் சிறுவர்கள் உட்பட 20 பேர் காயமடைந்த நிலையில் அதில் படுகாயமடைந்த 11 பேர் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

News January 18, 2026

மதுரை: பச்சிளம் குழந்தை உயிரிழந்த சோகம்

image

பேரையூர் அருகே சின்னகட்டளையை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் மனைவி ஆனந்தமரி. 6 மாத கர்ப்பிணியான இவர் எதிர்பாராமல் பினாயிலை குடித்துள்ளார். மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவருக்கு குறை மாதத்தில் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்து 2 நாட்களான நிலையில் நேற்று உயிரிழந்தது. இது குறித்து சேடப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 17, 2026

மதுரை: வரி செலுத்துபவர்கள் கவனத்திற்கு.!

image

மதுரை மக்களே.. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். இந்த லிங்கை <>கிளிக் செய்து<<>> அனைத்து சேவையையும் இதிலே பெறலாம். மேலும், இந்த சேவையைப் பெற உதவி தேவைப்பட்டால் 9884924299 என்ற உதவி எண்ணை அழைக்கலாம். இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். Share பண்ணுங்க.

error: Content is protected !!