News January 2, 2026

சிவகங்கை: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்

image

சிவகங்கை மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள், அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987-94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன் மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE பண்ணுங்க

Similar News

News January 10, 2026

காரைக்குடி ரஸ்க் கம்பெனியில் பயங்கர தீ விபத்து

image

காரைக்குடி நகர் பகுதியில் அனுமதி இல்லாமல் வீட்டில் ரஸ்க் தயாரிப்பு கம்பெனி செயல்படுவதாக கூறி மாநகராட்சி அதிகாரிகள் கடந்த நவம்பரில் அதனை பூட்டி சீல் வைத்தனர். அதே தளத்தில், பணியில் இருந்த வடமாநில இளைஞர்கள் சிலர் தற்போதும் தங்கி இருந்து வந்தனர். நேற்றிரவு ரஸ்க் கம்பெனியில் திடீரென்று தீப்பிடித்தது. இதில், ரஸ்க் தயாரிக்கும் இயந்திரங்கள் எரிந்து போனது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்

News January 10, 2026

சிவகங்கை: கூட்டு பட்டாவை இனி EASY-ஆ மாற்றலாம்!

image

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்து மாற்ற <>இங்கு க்ளிக் <<>>செய்து, பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்தல் ஆப்ஷனை தேர்ந்தெடுத்து தனி பட்டாவாக மாற்ற பின்வரும் ஆவணங்களை இணைக்க வேண்டும்.
1.கூட்டு பட்டா,
2.விற்பனை சான்றிதழ்,
3.நில வரைபடம்,
4.சொத்து வரி ரசீது,
5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30-60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE IT

News January 10, 2026

சிவகங்கை: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறுவன்

image

சிவகங்கை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுவன், அப்பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமியை, தன் வீட்டிற்கு பின்னால் அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்படி சிவகங்கை மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி, சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

error: Content is protected !!