News January 2, 2026
அதிரடியாக விலை உயரும் பிரிட்ஜ், AC!

புதிய BEE (Bureau of Energy Efficiency) விதிகள் நேற்று (ஜன.1) முதல் அமலுக்கு வந்துள்ளதால் AC, Fridge-களின் விலை 5%–10% வரை உயருகின்றன. புதிய விதிகளால் ஸ்டார் ரேட்டிங் தரம் குறைகிறது. இதனால் புதிய ஸ்டார் ரேட்டிங்கை அடைய உற்பத்தி செலவு உயர்வது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு குறைவு போன்றவற்றால் விலை உயருகின்றன. 2025 செப்., GST குறைப்பால் விலை குறைந்த நிலையில், தற்போது உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது.
Similar News
News January 30, 2026
FLASH: தமிழகம் வரும் PM மோடி!

பிப்ரவரி 3-வது வாரத்தில் PM மோடி TN வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 23-ம் தேதி வட மாவட்டங்களை குறிவைத்து மதுராந்தகத்தில் NDA சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் PM மோடி உரையாற்றினார். இந்நிலையில், கொங்கு மண்டலத்தில் நடைபெறவுள்ள பாஜக பொதுக்கூட்டத்தில் PM மோடி பங்கேற்க உள்ளார். மார்ச் 2-வது வாரத்தில் பேரவைத் தேர்தல் தேதி வெளியாகும் எனக் கூறப்படும் நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
News January 30, 2026
உலகின் நீளமான நடைபாதை.. மொத்தம் 22,387 கிமீ

தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் முதல் ரஷ்யாவின் மகதான் வரை நீளும் சாலையே, ஒரு நபர் நடந்து செல்லக்கூடிய உலகின் மிக நீளமான சாலையாக உள்ளது. சுமார் 22,387 கிமீ நீளம் கொண்ட இப்பாதை 17 நாடுகளை கடந்து செல்கிறது. போர்கள், விசா சிக்கல்கள் மற்றும் கடுமையான குளிர் போன்ற காரணங்களால் இந்த சாலையில் இதுவரை யாரும் பயணம் மேற்கொண்டதில்லை.
News January 30, 2026
தமிழகம், புதுச்சேரியில் மதுக்கடைகளுக்கு விடுமுறை

வள்ளலார் நினைவு நாளையொட்டி, நாளை மறுநாள் (பிப்.1) தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மதுக்கடைகளை மூடுவது குறித்து டாஸ்மாக் நிர்வாகத்துக்கு அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் சுற்றறிக்கை அனுப்பி வருகின்றனர். இதேபோல், புதுச்சேரி, காரைக்காலிலும் அன்றைய தினம் மதுக்கடைகள், பார்கள் மூடப்படும் என அம்மாநில கலால் துறை அறிவித்துள்ளது.


