News January 2, 2026
காஞ்சிபுரம் கலெக்டர் அறிவித்தார்!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை(ஜன.3) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி மோகன் அறிவித்துள்ளார்.
Similar News
News January 18, 2026
காஞ்சிபுரத்தில் வினோத பூஜை!

காஞ்சிபுரம், சாத்தணஞ்சேரி கிராம இருளர் இன மக்கள், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நல்ல பாம்பைப் பிடித்து வந்து வழிபடும் வினோத மரபைக் கடைபிடிக்கின்றனர். மக்கள் பாம்பிற்கு மஞ்சள், குங்குமம் இட்டு, கற்பூர ஆரத்தி காட்டி வணங்குகின்றனர். பின்னர், பாம்பைக் கொண்டு வந்தவர்களுக்குக் காணிக்கை வழங்கிப் பாராட்டும் கிராமத்தினர், வழிபாட்டிற்குப் பின் அந்தப் பாம்பைப் வனப்பகுதியில் கொண்டு சென்று விடுகின்றனர்.
News January 18, 2026
காஞ்சிபுரம்: தூக்கக் கலக்கத்தால் நேர்ந்த துயரம்!

சித்தூரில் இருந்து எம்.சாண்ட் மணல் ஏற்றிச் சென்ற லாரி, திருமுடிவாக்கம் அருகே கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் காயமடைந்த டிரைவர் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டிரைவர் தூக்க கலக்கத்தில் லாரியை ஓட்டியதே விபத்துக்குக் காரணம் என போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இச்சம்பவத்தால் வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
News January 18, 2026
காஞ்சிபுரம்: இரவு ரோந்து போலீசார் விவரம்!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று இரவு – இன்று (ஜன.17) காலை வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!


