News January 2, 2026
எனக்கு 6 வயது தான்: உதயநிதி

திமுகவின் அடுத்த முகம் என உதயநிதியை அக்கட்சியினர் குறிப்பிட்டு வருகின்றனர். இந்நிலையில், இதுதொடர்பாக ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டி ஒன்றில், கட்சியினர் என்னை கருணாநிதியோடு ஒப்பிடுவதை நான் விரும்பவில்லை என உதயநிதி தெரிவித்துள்ளார். மேலும், CM ஸ்டாலினுக்கு 50 ஆண்டுகள் அரசியல் அனுபவம் உள்ளதாக குறிப்பிட்ட அவர், நான் இப்பதான் six years old என்றும் கூறியுள்ளார். உங்கள் கருத்து என்ன?
Similar News
News February 6, 2026
தங்கம் விலை குறைய காரணம் என்ன?

சமீபத்தில் ஒரு சவரன் தங்கம் ₹1,25,000-ஐ கடந்து நிலையில், நேற்றைய நிலவரப்படி ₹4,650 குறைந்து ₹1,14,560-க்கு விற்பனையானது. US டாலரின் மதிப்பு உயர்வு, equity markets-ன் சரிவே விலை குறைந்ததற்கான காரணமாகும். அதோடு பணவீக்க அபாயத்தால் விகித குறைப்பை ஆதரிக்க போவதில்லை என ஃபெடரல் ரிசர்வ் கவர்னர் லிசா குக் கூறியிருக்கிறார். எனினும், இந்தாண்டு 1 அவுன்ஸ்(28g) தங்கம் $6000-க்கு விற்பனையாக வாய்ப்புள்ளதாம்.
News February 6, 2026
பிப்ரவரி 6: வரலாற்றில் இன்று

*1931 – சுதந்திர போராட்ட வீரர் மோதிலால் நேரு நினைவு நாள்
*1945 – பாடகர் பாப் மார்லி பிறந்தநாள்
*1956 – கவிஞர் பிறைசூடன் பிறந்தநாள்
*1959 – கண்டம் விட்டுக் கண்டம் பாயும் டைட்டன் ஏவுகணை புளோரிடாவில் வெற்றிகரமாக சோதனை
*1983 – வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் பிறந்தநாள்
*2022 – பாடகி லதா மங்கேஷ்கர் நினைவு நாள்
News February 6, 2026
தங்கப் பெண்ணுக்கு தங்க மோதிரம் பரிசு

குப்பையில் கிடந்த 45 சவரன் நகைகளை உரியவரிடமே ஒப்படைத்த தூய்மை பணியாளர் பத்மாவிற்கு கடல் கடந்தும் பாராட்டுகள் குவிகின்றன. பத்மாவின் நேர்மையை அறிந்த மலேசிய சட்டத்துறை துணை அமைச்சர் குலசேகரன் அவருக்கு தங்க மோதிரம் பரிசளித்துள்ளார். தனது உதவியாளரான வடிவுக்கரசி என்பவரை சென்னைக்கு அனுப்பி வைத்து பத்மாவிடம் பரிசை வழங்கியதோடு, வீடியோ காலில் உரையாடி மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.


