News January 2, 2026
ராமநாதபுரத்தில் போக்குவரத்து மாற்றம்

உத்திரகோசமங்கையில் ஜன.02, 03 ஆகிய தேதிகளில் நடைபெறும் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மதுரை பரமக்குடி வழியாக கோவிலுக்கு வரும் கார்கள், இருசக்கர வாகனங்கள் கோவில் விளக்கு சாலை வழியாகவும், கீழக்கரை, சாயல்குடி, சிக்கல் வழியாக கோவிலுக்கு வரும் கார்கள் திருப்புல்லாணி விலக்கு ரோடு வழியாகவும், பேருந்துகள், வேன்கள் களரி வரை அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 10, 2026
ராமநாதபுரம்: 10th போதும்.. ரூ.37,000 சம்பளத்தில் வங்கி வேலை

ராமநாதபுரம் மக்களே, தனியார் வங்கியான பெடரல் வங்கியில் அலுவலக உதவியாளர் பணிகளுக்கு பல்வேறு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 10ஆம் வகுப்பு படித்தவர்கள் இங்கு <
News January 10, 2026
ராமநாதபுரம்: ஒரே நாளில் 14 பேரை கடித்து குதறிய நாய்..!

ராமநாதபுரம் மாவட்டத்தில் தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பரமக்குடி அருகே மஞ்சக்கொள்ளை கிராமத்தில் நேற்று மதியம் வெறிநாய் ஒன்று தெருவில் சுற்றி வந்துள்ளது. வீட்டு வாசலில் இருந்த பெண்கள், முதியவர்களை துரத்தி துரத்திக் கடித்தது முதியவர்கள் சிலர் தடுக்க முடியாமல் கீழே விழுந்தனர். இரு பெண்கள் உட்பட 14 பேரை நாய் கடித்தது. இவர்கள் அனைவரும் ராமநாதபுரம் GH-யில் அனுமதிக்கப்பட்டனர்.
News January 10, 2026
போலி நிதி நிறுவனங்கள் குறித்து புகார் அளிக்கலாம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு அங்கீகாரம் பெறாத போலி நிதி நிறுவனங்கள், ஏலச்சீட்டு நிறுவனங்கள், மனை வணிக நிறுவனங்கள் குறித்து பொதுமக்கள் ராமநாதபுரம் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகம் மேலச்சோத்துரணி, சக்கரக்கோட்டை என்ற முகவரியில் நேரிலோ அல்லது 94981-07562, 83000-38265 கைப்பேசி எண்களிலோ புகார் தெரிவிக்கலாம் என பொருளாதாரக் குற்றப்பிரிவு துணைக் கண்காணிப்பாளா் ராஜமுரளி தெரிவித்தார்.


