News January 2, 2026

தருமபுரி பெண்களுக்கு ரூ.10 லட்சம்! CLICK NOW

image

தருமபுரி மாவட்ட பெண்களே.., நீங்கள் சொந்தமாக தொழில் தொடங்க, விரிவுப்படுத்த ஆசையா..? மத்திய அரசின் ’மகிளா உத்யம் நிதி யோஜனா’ திட்டம் மூலம் ரூ.10 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. மிகக் குறைவான வட்டி விகிதத்தில் பிணையமின்றி இந்தத் தொகை வழங்கப்படும். 10 ஆண்டுகள் வரை கடனை திருப்பி செலுத்தலாம். உடனே அருகில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியை அணுகவும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News January 17, 2026

தருமபுரியில் மர்மமான முறையில் இறந்த சிறுத்தை!

image

ஒகேனக்கல், தாசம்பட்டி வனப்பகுதியில் நேற்று (ஜன.16) வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது 8 வயதுக்குட்பட்ட ஆண் சிறுத்தை மர்மமான முறையில் இறந்து கிடந்தது. தகவல் அறிந்த மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் மற்றும் அதிகாரிகள் வனப்பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். பிரேத பரிசோதனைக்கு பின்னர் சிறுத்தையின் உடல் வனப்பகுதியிலேயே எரிக்கப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News January 17, 2026

தருமபுரி: உழவர் சந்தையின் விலை நிலவரம்!

image

தருமபுரி உழவர் சந்தையில் இன்றைய (ஜன.17) காய்கறி விலை நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி (1 கிலோ) தக்காளி: ரூ.26, கத்தரிக்காய்: ரூ.20, வெண்டைக்காய்: ரூ.30, முள்ளங்கி: ரூ.10, அவரைக்காய்: ரூ.20, கொத்தவரை: ரூ.45, பச்சைமிளகாய்: ரூ.36, பப்பாளி: ரூ.30, கொய்யா: ரூ.50 மற்றும் முருங்கைக்கீரை (50-கிராம்) ரூ.15 என விற்பனை செய்யப்படுகின்றன.

News January 17, 2026

தருமபுரி: கையும் களவுமாக சிக்கிய போதை ஆசாமி!

image

மாரண்டஅள்ளி போலீசார் எம்.செட்டிஅள்ளி நேற்று (ஜன.16) ஏரிக்கரை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது போலீசாரை கண்டதும் ஒருவர் தப்பி ஓட முயன்றார். அந்த நபரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில் அவர் எம்.செட்டிஅள்ளியை சேர்ந்த மணிகண்டன் (32) என்பதும், அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. மேலும் போலீசார் அந்த இளைஞரிடம் இருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!