News January 2, 2026
ஹேப்பி Introverts டே!

10 பேர் கொண்ட நண்பர்கள் கூட்டம் இருந்தால், அதில் நிச்சயம் ஒரு Introvert இருப்பான். அனைவரிடமும் எளிதில் பேச மாட்டார்கள். கூட்டத்தில் நிற்க கூச்சம், பலர் முன்னிலையில் சத்தமாக பேச தயக்கம்; கோபம், துக்கம் என அனைத்தையும் தங்களுக்குள் புதைத்து வைக்கும் ரகசியம் தெரிந்தவர்கள் இவர்கள். இவர்களின் மெளனமே பல இடங்களில் இவர்களுக்கு பலமாக மாறிவிடுகிறது. உங்க கேங்கில் இருக்கும் Introvert யாரு.. கமெண்ட் பண்ணுங்க?
Similar News
News January 12, 2026
ஒவ்வொரு மாதமும் ₹6000 கொடுக்கும் அரசு திட்டம்

தீன் தயாள் உபாத்யாயா கிராமின் கௌஷல்யா யோஜனா திட்டம் மூலம் கிராமப்புற பகுதிகளில் வேலையில்லாத இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் சேருபவர்களுக்கு 2 முதல் 6 மாதங்களுக்கு, மாதம் ₹6000 ஊக்கத்தொகையும் கிடைக்கும். இதற்கு 15 முதல் 35 வயதுடைய இளைஞர்களும், 45 வயதுக்குள் இருக்கும் பெண்களும் விண்ணப்பிக்கலாம். முழு தகவலுக்கு <
News January 12, 2026
BREAKING: டெல்லியில் CBI வலை.. விஜய் அதிர்ச்சி

கரூரில் 41 பேர் பலியான வழக்கு தொடர்பாக விஜய்யிடம் 2 மணிநேரத்திற்கும் மேலாக CBI அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 4 பேர் கொண்ட குழுவினர் 56 கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதில் பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் அளித்திருந்த பதில்களுடன் விஜய் அளிக்கும் பதிலில் ஏதேனும் முரண்பாடாக இருந்தால் அது, விஜய்க்கு சிக்கலை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.
News January 12, 2026
திமுக – காங்., கூட்டணியில் மீண்டும் சண்டை வெடித்தது

TN-ல் கூட்டணி ஆட்சி இருக்காது, அதிகாரத்தில் பங்கு கொடுக்கும் எண்ணம் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு இல்லை என அமைச்சர் <<18826821>>ஐ.பெரியசாமி <<>>கூறியிருந்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள செல்வப்பெருந்தகை, ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருக்கிறது, ஐ.பெரியசாமி கூறியது அவருடைய தனிப்பட்ட கருத்து என பேசியுள்ளார். மேலும், இதுகுறித்து ராகுல் காந்தியும், ஸ்டாலினும் தான் பேசி முடிவு செய்யவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.


