News May 3, 2024
இளைஞர்கள் பாழடைவதற்கு பாஜக தான் காரணம்

இளைஞர்கள் போதைக் கலாச்சாரத்தில் பாழடைந்து வருவதற்கு பாஜக தான் காரணம் என செல்வப்பெருந்தகை குற்றம் சாட்டியுள்ளார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், ₹5 லட்சம் கோடி மதிப்புள்ள போதைப் பொருள் மாயமானது குறித்து பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்களும் ஏன் வாய் திறக்கவில்லை? என்றும், போதைப்பொருள் கடத்தலில் கைது செய்யப்பட்டதை மட்டும் பேசும் பாஜக இதுகுறித்தும் பேசவேண்டும் என்றும் அவர் கூறினார்.
Similar News
News September 21, 2025
தனுஷ் இயக்கத்தில் நடிப்பது சிரமம்: சத்யராஜ்

தனுஷின் ‘இட்லி கடை’ படம் பட்டையை கிளப்பும் என சத்யராஜ் கூறியுள்ளார். தனுஷுடன் நடிக்க வேண்டுமென தனக்கு நீண்ட நாள்களாக ஆசை இருந்ததாகவும், அது ‘இட்லி கடை’ படத்தில் அவர் இயக்கத்திலேயே நிறைவேறிவிட்டதாகவும் சத்யராஜ் தெரிவித்துள்ளார். ராஜமெளலி இயக்கத்தில் கூட எளிதில் நடித்துவிட்டேன், ஆனால் தனுஷ் இயக்கத்தில் நடிப்பது சிரமம் என்று அவர் கொங்கு தமிழில் குசும்பாக பேசினார். படத்திற்கு யாரெல்லாம் வெயிட்டிங்?
News September 21, 2025
பெட்ரூம் அமைதியா இருக்க.. இந்த 4 பொருள்களை நீக்குங்க!

வாஸ்து சாஸ்திரங்களின் படி, படுக்கையறையில், இந்த 4 பொருள்கள் இருக்கக்கூடாது *தெய்வப் படங்கள்: இது எதிர்மறையாக ஆற்றலை பெருக்கும் *விலங்குகளின் படங்கள்: தம்பதியரின் உறவில் மோதல்களை ஏற்படுத்தி, அமைதியை குலைக்கும் *காலணிகள்: தலைப்பகுதிக்கு அருகிலும், படுக்கைக்கு அடியிலும் காலணிகள் இருக்கக்கூடாது. இது எதிர்மறை சக்தியை அதிகரிக்கும் *துடைப்பம்: இது நிதி நிலையை மோசமாக்கி, துரதிஷ்டத்தை தரக்கூடியது.
News September 21, 2025
அனைத்து ரேஷன் கார்டுக்கும் ₹5,000.. தமிழக அரசு தகவல்

தீபாவளி பரிசாக ஜிஎஸ்டி குறைப்பை அமல்படுத்துவதாக சுதந்திர தின உரையில் மோடி அறிவித்தார். இந்நிலையில், நாடு முழுவதும் நாளை புதிய ஜிஎஸ்டி அமலுக்கு வருகிறது. இந்நிலையில், அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் பொங்கல் பரிசாக ₹5,000 வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதுபற்றிய அறிவிப்பை தீபாவளியையொட்டி CM ஸ்டாலின் அறிவிப்பார் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.