News January 2, 2026

குமரி: தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை!

image

தத்தன்விளையை சேர்ந்தவர் வெல்டிங் தொழிலாளி ஜெகன் (46). இவர் நேற்று முன் தினம் இரவு மது அருந்தி விட்டு வீட்டுக்கு வந்தவர் மனைவி அகிலா-விடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர் பிள்ளைகளிடம் சிறிது நேரம் விளையாடியவர் திடீரென வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து களியக்காவிளை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News January 15, 2026

குமரி: மக்களே.. இனி ஆன்லைனில் பட்டா!

image

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் <>eservices.tn.gov.in<<>> என்ற தளத்திற்கு செல்லுங்கள். பட்டா, சிட்டா நில அளவைப் பதிவேடு ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள். அதில் மாவட்டம், வட்டம், கிராமம் பட்டா, சிட்டாவை தேர்வு செய்து உங்கள் செல்போன் எண்ணை பதிவிடுங்கள். பின்னர் OTP-யை பதிவிட்டு உறுதி செய்தவுடன் உங்களது ஆவணம் PDF ஃபைலாக தோன்றும். அதனை பிரிண்ட் அவுட் எடுத்துக்கோங்க அவ்வளவுதான். SHARE பண்ணுங்க.

News January 15, 2026

குமரி: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

image

குமரி மாவட்ட ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, தேவையான பொருட்களுக்கு பதிலாக மற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) சென்னை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் SHARE செய்து எல்லோருக்கும் தெரியப்படுத்துங்க.

News January 15, 2026

குமரி: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

குமரி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!