News May 3, 2024
கெட்ட கொழுப்பை கரைக்கும் சூரிய முத்திரை!

உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைக்க சூரிய முத்திரை உதவுகிறது. மேற்கண்ட படத்தில் காட்டியபடி, மோதிர விரலை மடக்கி, உள்ளங்கையின் நடுவில் தொட வேண்டும். கட்டை விரலால் மோதிர விரலை மிதமாக அழுத்த வேண்டும். மற்ற மூன்று விரல்கள் நீட்டி இருக்க வேண்டும். தினமும் காலை, மாலை என இருவேளை 5 – 10 நிமிடங்கள் வெறும் வயிற்றில் செய்வது பலனைத் தரும். முத்திரை செய்து முடித்த உடனே தண்ணீர் அருந்த வேண்டும்.
Similar News
News September 21, 2025
மீண்டும் கை குலுக்க மறுத்த சூர்யகுமார் யாதவ்

பாகிஸ்தானுக்கு எதிரான இன்றைய போட்டியிலும் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் பாக்., கேப்டனுடன் கை குலுக்க மறுத்தார். லீக் சுற்று மோதலில் நடந்த நிகழ்வே மீண்டும் அரங்கேறியது. அதே நேரத்தில், டாஸின் போது பாக்., கேப்டன் சூர்யகுமார் யாதவை கண்டும் காணாதது போல் இருந்தார். கடந்த முறை இது தொடர்பாக பாக்., புகாரளித்த நிலையில், கை குலுக்குவது அவசியமில்லை என ஐசிசி பதிலளித்திருந்தது.
News September 21, 2025
காலம் மறந்தவை: பொம்மை பிஸ்கட் ஞாபகம் இருக்கா?

80s, 90s கிட்ஸ்களே, குருவி, மயில், குரங்கு, மீன் என வகை வகையான விலங்குகளின் வடிவங்களில் நாம் வாங்கி தின்ற இந்த பொம்மை பிஸ்கெட்டுகள் ஞாபகம் இருக்கிறதா? ஒவ்வொரு விலங்குகளையும் எடுத்து அதன் ஒவ்வொரு பாகமாக திண்போம். ஒரு ரூபாய்க்கு ஒரு கை நிறைய அள்ளி தருவார் பெட்டிக்கடை அண்ணன். டீயில் மீன் பிஸ்கெட்டை போட்டு அதை மிதக்கவிட்டு சாப்பிடுவோம். இதை உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!
News September 21, 2025
விஜய் கூறியது அவருடைய தனிப்பட்ட கருத்து: EPS

2026 தேர்தலில் தவெகவுக்கும் திமுகவுக்கும் இடையேதான் போட்டி என விஜய் பேசியதற்கு, ரியாக்ட் செய்துள்ள EPS, அது விஜய்யின் தனிப்பட்ட கருத்து என்றும், மக்களின் கருத்து வேறாக இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார். விஜய் மீது நேரடி விமர்சனத்தை EPS தவிர்ப்பதாக கூறப்படுகிறது. விஜய்க்கு முக்கியத்துவம் அளிக்கக் கூடாது என்பதாலா? அல்லது எதிர்காலத்தில் கூட்டணி வைக்க உதவும் என்று EPS நினைக்கிறாரா.. உங்க கருத்து?