News January 2, 2026
கடலூர்: பொங்கல் பரிசு… முக்கிய அறிவிப்பு!

தமிழக அரசால் ஆண்டுதோறும் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. அப்படி உங்களுக்கு வழங்கப்படும் பொருட்கள் தரமில்லாமலோ அல்லது சரியாக வந்து சேரவில்லை என்றால் ‘1800 425 5901’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு அலைச்சல் இல்லாமல் உங்களால் புகார் அளிக்க முடியும். மேலும் இந்த எண்ணின் மூலமாக ரேஷன் கடை மற்றும் ரேஷன் பொருட்கள் குறித்தும் நீங்கள் புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க!
Similar News
News January 14, 2026
கடலூர்: 2,000 போலீசார் பாதுகாப்பு!

கடலூர் மாவட்டத்தில் பொங்கல் விழாவை முன்னிட்டு எஸ்.பி ஜெயக்குமார் மேற்பார்வையில், கூடுதல் கண்காணிப்பாளர்கள் கோடீஸ்வரன், ரகுபதி தலைமையில், 9 துணைக் கண்காணிப்பாளர்கள், 39 ஆய்வாளர்கள், 231 உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட சிறப்பு காவல் படையினர், ஊர்க்காவல் படையினர் என 2,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக எஸ்.பி. அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 14, 2026
கடலூர்: தவெக நிர்வாகிக்கு கத்திவெட்டு

கடலூர் முதுநகர் சிங்காரத்தோப்பை சேர்ந்தவர் வெற்றிவேல் (41). தமிழக வெற்றிக் கழகத்தின் பகுதி செயலாளரான இவர் நேற்று இரவு கரும்பு வியாபாரத்தில் ஈடுபட்டார். அப்போது அதே பகுதியை சேர்ந்த 2 பேர், அவரிடம் தகராறு செய்து கத்தியால் வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த வெற்றிவேல் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். இது குறித்து துறைமுகம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
News January 14, 2026
கடலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கடலூர் மாவட்டத்தில் வருகிற ஜன.16ஆம் தேதி திருவள்ளுவர் தினம் மற்றும் ஜன.26ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு, 2 நாட்களுக்கு அனைத்து சில்லறை மதுபான கடைகளும், மனமகிழ் கூடங்களும் மூடப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார். மேலும் தடையை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.


