News January 2, 2026
குமரி: போலீஸ் பெயரில் மோசடி.. மக்களே உஷார்!

குமரி மாவட்ட காவல்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், குமரியில் காவல்துறை அதிகாரிகளின் பெயரையோ (அ) அவர்களுடன் இருக்கும் புகைப்படத்தை காட்டியோ, வேறு வகையில் தொடர்பில் இருப்பதாக கூறி யாரேனும் மோசடியில் ஈடுபட்டாலோ (அ) தவறாக பயன்படுத்தினாலோ கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இது சம்பந்தமாக தகவல் தெரிந்தால் பொதுமக்கள் போலீஸ் எஸ்.பி-யின் வாட்சப் எண்ணிற்கு (81222 23319) புகார் அளிக்கலாம்.
Similar News
News January 12, 2026
BREAKING: குமரி எக்ஸ்பிரஸ் ரயிலுக்குள் இருந்த சடலம்

பெங்களூரில் இருந்து கன்னியாகுமரிக்கு எக்ஸ்பிரஸ் ரயில் இன்று மதியம் வந்தது. ரயிலில் இருந்து அனைவரும் இறங்கி சென்ற நிலையில் ரயில் பெட்டிகளை ரயில்வே போலீசார் சோதனை செய்த நிலையில் ரயில் பெட்டி ஒன்றில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் உயிரிழந்த நிலையில் இருக்கையின் அடியில் படுத்து கிடந்துள்ளார். ரயில்வே போலீசார் அவரது உடலை மீட்டு யார் எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரித்து வருகின்றனர்.
News January 12, 2026
சுற்றுச்சூழலை பாதிக்கும் டயர்களை எரிக்க வேண்டாம்

பொங்கலின் முந்தைய நாளான போகிப் பண்டிகையின் போது பழைய பொருட்களை எரிப்பது வழக்கம். குமரியில் போகிப் பண்டிகை கொண்டாடப்படுவதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படும் வகையில் உள்ள டயர் போன்ற பொருட்களை எரிக்க வேண்டாம். மேலும், சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் போகிப் பண்டிகை கொண்டாட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அழகு மீனா அறிவுறுத்தியுள்ளார்.
News January 12, 2026
குமரி: வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்துவது இனி ஈஸி!

குமரி மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். <


