News January 2, 2026
வேலூர் உழவர் சந்தைகளில் 127 கோடிக்கு வர்த்தகம்

வேலூர் மாவட்டத்தில் வேலூர் டோல்கேட், காகிதப்பட்டறை, காட்பாடி, குடியாத்தம், பள்ளிக்கொண்டா, பேரணாம்பட்டு ஆகிய 6 இடங்களில் உழவர் சந்தைகள் இயங்கி வருகிறது. இதில் கடந்த 2025-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் டிசம்பர் 31-ம் தேதி வரை உழவர் சந்தைகள் மூலம் 32 ஆயிரத்து 985 டன் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவை விற்பனையாகி உள்ளது. இதன் மதிப்பு ரூ.127 கோடியே 78 லட்சம் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Similar News
News February 17, 2026
வேலூர்: அனைத்து CERTIFICATES-ம் இனி Whatsapp-ல்!

வேலூர் மக்களே.., பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News February 17, 2026
வேலூர் ஒழுங்குமுறை கூடத்தில் நெல் விலை நிலவரம்

வேலூர் டோல்கேட் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நெல் மூட்டைகளின் இன்றைய (பிப்.17) விலை நிலவரம் வெளியாகியுள்ளது. 75 கிலோ நெல் மூட்டைகளில் ஆர்என்ஆர் ரூ.1411 முதல் 2240 வரையும், மகேந்திரா 606 ரகம் ரூ.1250 முதல் 2116 வரையும், நர்மதா ரூ.1399 முதல் 2257 வரையும், மணிலா (80 கிலோ) ரூ.6500 முதல் 11159 வரையும், கொப்பரை தேங்காய் ஒரு கிலோ ரூபாய் 118 முதல் 176 வரையும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
News February 17, 2026
வேலூர்: பம்புசெட்டு அமைத்தால், இது இலவசம்!

வேலூர் மக்களே, தமிழ்நாடு அரசு, ‘முதலமைச்சரின் சூரிய சக்தி பம்புசெட்டுகள் திட்டத்தின்’ கீழ் விவசாயிகளுக்கு 70% மானியத்தில் சோலார் பம்புசெட்டுகளை வழங்குகிறது. அத்துடன், 5 ஆண்டுகளுக்கு இலவச பராமரிப்பு, காப்பீட்டு வசதியும் செய்து தரப்படும். இதில் பயனடைய விரும்பும் நபர்கள், <


