News January 2, 2026

வேலூர் உழவர் சந்தைகளில் 127 கோடிக்கு வர்த்தகம்

image

வேலூர் மாவட்டத்தில் வேலூர் டோல்கேட், காகிதப்பட்டறை, காட்பாடி, குடியாத்தம், பள்ளிக்கொண்டா, பேரணாம்பட்டு ஆகிய 6 இடங்களில் உழவர் சந்தைகள் இயங்கி வருகிறது. இதில் கடந்த 2025-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் டிசம்பர் 31-ம் தேதி வரை உழவர் சந்தைகள் மூலம் 32 ஆயிரத்து 985 டன் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவை விற்பனையாகி உள்ளது. இதன் மதிப்பு ரூ.127 கோடியே 78 லட்சம் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News

News January 16, 2026

வேலூர்: பெண்ணிடம் நூதன முறையில் மோசடி!

image

ரங்காபுரத்தைச் சோ்ந்த 43 வயது பெண்ணின் வாட்ஸ் ஆப் எண்ணுக்கு, ஆன்லைன் பங்கு வா்த்தக முதலீட்டில் அதிக லாபம் ஈட்டலாம் என ஒரு லிங்க் வந்துள்ளது. அதன்மூலம் ஒரு செயலியை பதிவிறக்கம் செய்து ஒரு சிறிய தொகையை முதலீடு செய்துள்ளார். அதில் அதிக லாபம் கிடைத்ததால், தொடர்ந்து ரூ.61,38,745 பணத்தை முதலீடு செய்துள்ளார். ஆனால் இந்த பணம் திரும்ப கிடைக்காத நிலையில் மாவட்ட சைபா் குற்றப்பிரிவில் புகாா் அளித்துள்ளார்.

News January 15, 2026

வேலூர்: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் குடியாத்தம், காட்பாடி, கே வி குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றன. அதன்படி இன்று (ஜன-15) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம். ஷேர் செய்யவும்.

News January 15, 2026

வேலூர்: ரோடு சரியில்லையா? App-ல் புகாரளிக்கலாம்!

image

வேலூர் மக்களே உங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பின்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க! அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து “<>நம்ம சாலை<<>>” செயலியை பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். மாவட்ட சாலைகள் 72 மணி நேரத்திலும், மாநில நெடுஞ்சாலைகள் 24 மணி நேரத்திலும் சரி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!