News January 2, 2026

BREAKING: பெருந்துறை அருகே பயங்கர விபத்து! 10 பேர் காயம்

image

பெருந்துறை அருகே கோவை – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ட்ராவல்ஸ் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். வளைகாப்பு நிகழ்ச்சிக்காக சென்று கொண்டிருக்கும் போது, முன்னால் சென்ற லாரியை முந்துகையில் லேசாக உரசவே, கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்துள்ளது.

Similar News

News January 13, 2026

பொங்கல் பரிசு: ஈரோடு மக்களே உஷார்

image

ஈரோடு மக்களே, பொங்கலை முன்னிட்டு பரிசு வழங்குவதாக What’s App-ல் பரவும் தகவல்கள் போலியானவை என சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர். இத்தகவல்களில் உள்ள இணைப்புகளை பகிரச் சொல்லி, பரிசு தொகை வழங்குவதாக கூறி மோசடி நடக்கிறது. இவை பண மோசடிக்கு வழிவகுக்கும் என்பதால் அதை நம்ப வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சைபர் மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் 1930 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம்.

News January 13, 2026

ஈரோடு: அவுட்டுக்காய் கடித்து குட்டி யானை உயிரிழப்பு

image

ஈரோடு, கடம்பூர் வனப்பகுதியில் குட்டி யானை ஒன்று உயிரிழந்து கிடந்தது. இதுகுறித்து வனத்துறையினர் நடத்திய விசாரணையில் ‘அவுட்டுக்காய்’ கடித்ததில் வாய் மற்றும் தாடைப் பகுதி சிதைந்து யானை உயிரிழந்தது உறுதி செய்தனர். இது தொடர்பாக காளிமுத்து (53) என்பவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

News January 13, 2026

ஈரோடு கலெக்டர் உத்தரவு

image

ஈரோட்டில் திருவள்ளுவர் தினம் (ம) குடியரசு தினத்தை முன்னிட்டு மதுக்கடைகளை மூட கலெக்டர் கந்தசாமி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருவள்ளுவர் தினம் (ஜன.16) (ம) குடியரசு தினத்தை (ஜன.26) முன்னிட்டு மதுபானக் கடைகள், அதனுடன் இணைந்த பார்கள் 2 நாள்கள் கட்டாயம் மூடப்பட்டிருக்க வேண்டும். உத்தரவை மீறும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

error: Content is protected !!