News January 2, 2026

சென்னை: மனவேதனையில் கல்லூரி மாணவன் தற்கொலை!

image

வேளச்சேரி அம்பிகா தெருவை சேர்ந்தவர் முகேஷ் (19) தரமணியில் உள்ள பாலிடெக்னிக்கில் படித்து வருகிறார். இவர் அம்மா துபாயில் வேலை செய்வதால், பாட்டி வீட்டில் தங்கி படித்துள்ளார். இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளனர். அந்த பெண் இவரை ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனவேதனையில் இருந்த முகேஷ் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வேளச்சேரி போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News January 27, 2026

BREAKING: சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு

image

சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விமானநிலையத்தில் செயல்படும் கேண்டீன் ஒன்றில் புகை எழுந்ததால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது. தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயை அணைக்கும் பணி நடைப்பெற்று வருகிறது. இதனால் சென்னை விமான நிலையத்தில் இருந்து இயக்கப்படும் அனைத்து விமானங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

News January 27, 2026

பராமரிப்பு பணி: 5 ரயில்கள் முழுமையாக ரத்து

image

சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை சென்ட்ரல் – கூடூர் இடையிலான தாடா மற்றும் சூலூர்பேட்டை ரயில் நிலையங்களில் தண்டவாள பராமரிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் இன்று (27ம் தேதி) அதிகாலை 12.50 மணி முதல் காலை 8.50 மணி வரை நடைபெறுகிறது. இதன்காரமாக, 5 மெமு ரயில்கள் முழுமையாகவும், 4 ரயில்கள் பகுதியளவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

News January 27, 2026

சென்னை: சர்க்கரை அட்டை → அரிசி அட்டையாக மாற்றுவது எப்படி?

image

சென்னை மக்களே, சீனி அட்டையில் இருந்து அரிசி அட்டைக்கு சுலபமாக மாற்றலாம்.
1 இங்கு <>க்ளிக் <<>>செய்து மொபைல் எண் பதிவு பண்ணுங்க
2. அட்டை வகை மாற்றம் சேவையை தேர்ந்தெடுங்க
3. அரிசி ரேஷன் அட்டையை தேர்ந்தெடுங்க
4. சுயவிவரங்களை பதிவு செய்யுங்க 30 நாட்களில் மாறிவிடும்.
விண்ணப்ப நிலையை 78452 52525 இந்த எண்ணுக்கு வாட்ஸ் ஆப்பில் HI அனுப்பி தெரிஞ்சுக்கலாம். இந்த பயனுள்ள தகவலை எல்லாருக்கும் SHARE பண்ணுங்க..

error: Content is protected !!