News January 2, 2026
சிவகங்கை: 10th தகுதி.. ரூ.37,000 சம்பளத்தில் வேலை ரெடி!

சிவகங்கை மக்களே, தனியார் வங்கியான பெடரல் வங்கியில் அலுவலக உதவியாளர் பணிகளுக்கு பல்வேறு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 10th படித்தவர்கள் இங்கு <
Similar News
News January 19, 2026
மானாமதுரை: ஒருவரை அரிவாளால் வெட்டிய கும்பல்!

மானாமதுரை மூங்கில் ஊருணி இலங்கைத் தமிழர் முகாம் முன்னாள் தலைவர் ஜெயேந்திரன் (49) மீது நேற்றிரவு அவரது வீட்டில் இருந்தபோது அடையாளம் தெரியாத மூவர் அரிவாளால் தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தாக்குதலின் போது அவரது டூவீலரும் சேதப்படுத்தப்பட்டது. சம்பவம் தொடர்பாக மானாமதுரை போலீசார் தாக்குதலுக்கான காரணம், தாக்கியவர்கள் குறித்து விசாரிக்கின்றனர்.
News January 19, 2026
சிவகங்கைக்கு மத்திய அரசு சொன்ன GOOD நியூஸ்..

செங்கோட்டை, ராமேஸ்வரம், எர்ணாகுளம் விரைவு ரயில்கள் சிவகங்கையில் நின்று செல்ல மத்திய அமைச்சர் எல்.முருகன் ரயில்வே அமைச்சருக்கு பரிந்துரைத்துள்ளார். மக்கள் மற்றும் பயணிகள் கோரிக்கையை ஏற்று, ரயில்கள் சிவகங்கையில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்புக்கு சிவகங்கை மாவட்ட ரயில் பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
News January 19, 2026
சிவகங்கை: விவசாயி தற்கொலை செய்து கொண்ட சோகம்

பீர்க்கலைக்காடு பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (46). விவசாயி மற்றும் கூலி வேலை செய்து வந்த இவர், மது போதைக்கு அடிமையாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், முருகேசனின் மனைவி பாண்டிச்செல்வி மற்றும் அவரது குழந்தைகள் அவரை கண்டித்ததாக கூறப்படும் நிலையில், வயலுக்கு அடிக்கும் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சாக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.


