News May 2, 2024
45 ஆண்டுகளில் இல்லாத அளவு வேலையில்லாத் திண்டாட்டம்

நாட்டில் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து விட்டதாக பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். நாட்டில் பணவீக்கம் பலமடங்கு அதிகரித்து விட்டதாகவும், தேர்வுத்தாள்கள் அடிக்கடி கசிய விடப்படுவதாகவும், ஊழல்கள் அடிக்கடி நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்தார். அரசு வேலைவாய்ப்புக்கு முடிவுகட்டும் திட்டங்களை பாஜக கொண்டு வந்திருப்பதாகவும் கூறினார்
Similar News
News February 3, 2026
CINEMA 360°: ரீ-ரிலீசாகும் ‘மின்னலே’

*காதலர் தினத்தையொட்டி மாதவனின் ‘மின்னலே’ படம் பிப்.13-ல் ரீ-ரிலீசாகிறது *ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘லக்கி தி சூப்பர்ஸ்டார்’ பிப்.20 முதல் ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் ஆகவுள்ளது *’துரந்தர் 2′ அப்டேட் இன்று 12:12 மணிக்கு வெளியாகிறது *ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் துல்கர் சல்மான், மிருணாள் தாகூர் இணைந்து நடித்துள்ள ‘பீகி பீகி’ ஆல்பம் யூடியூப்பில் வெளியானது
News February 3, 2026
பிரிவினைவாத மனநிலையில் ஸ்டாலின் பேச்சு: FM

ஆரியத்துக்கும், திராவிடத்துக்கும் போர் நடப்பதாக CM ஸ்டாலின் கூறியதற்கு நிர்மலா சீதாராமன் பதிலடி கொடுத்துள்ளார். ஸ்டாலினின் பேச்சு முழுக்க முழுக்க பிரிவினைவாத மனநிலை கொண்டவர்களின் எண்ணம் எனக்கூறிய அவர், பட்ஜெட்டில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டுள்ளதாக ஸ்டாலின் கூறியது வருந்தத்தக்க விமர்சனம் என்றார். அதிவேக ரயில்கள், சிறப்பு வேளாண் திட்டங்கள் தமிழ்நாட்டுக்கு பயனளிக்காதா எனவும் கேள்வி எழுப்பினார்.
News February 3, 2026
SPORTS 360°: ஸ்குவாஷில் அனாஹத் சிங் சாம்பியன்

*WPL எலிமினேட்டரில் குஜராத் ஜெயண்ட்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் இன்று பலப்பரீட்சை *காயம் காரணமாக ஆசிய டீம் சாம்பியன்ஷிப் பேட்மிண்டனில் இருந்து பி.வி.சிந்து விலகல் *PSA ஸ்குவாஷ் தொடரில் அனாஹத் சிங் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் *U19 SAFF சாம்பியன்ஷிப் கால்பந்தில், இந்தியாவை 0-2 என்ற கோல் கணக்கில் வங்கதேசம் வீழ்த்தியது *ISL கால்பந்து தொடரின் ஸ்ட்ரீமிங் உரிமத்தை ₹8.62 கோடிக்கு FANCODE பெற்றுள்ளது


