News January 2, 2026

நாகை: குழந்தை இறந்த சோகத்தில் தாய் தற்கொலை

image

கீழையூா் அடுத்த அகரம் பகுதியைச் சோ்ந்த ஐயப்பன் (35)-ரம்யா (30) தம்பதி மகன் தேவா (3). ஐயப்பன் கடந்தாண்டு உயிரிழந்த நிலையில் ரம்யா மகனை வளா்த்து வந்தாா். இந்நிலையில், எதிா்பாராதவிதமாக வீட்டுவாசலில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை அருகிலுள்ள வாய்க்காலில் தவறி விழுந்து இறந்துபோனது. இதனால் மிகுந்த மனவேதனை அடைந்த ரம்யா புதன்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

Similar News

News January 5, 2026

நாகை: ரூ.5 லட்சம் இலவச காப்பீடு – Apply பண்ணுங்க!

image

நாகை மக்களே.. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.!

News January 5, 2026

நாகை: சிலிண்டர் மானியம் வருதா? CHECK IT

image

கூகுளில் <>mylpg என்று <<>>இணையத்தளத்தில் சென்றால், 3 கியாஸ் சிலிண்டர்களின் படங்கள் இருக்கும். அதில் நீங்கள் வாங்கும் சிலிண்டரை கிளிக் செய்ய வேண்டும். அடுத்து உங்கள் மொபைல் எண்ணை போட்டால், OTP வரும். அந்த நம்பரையும் போட வேண்டும். பின்னர், View Cylinder Booking History அல்லது Subsidy transferred என்ற விருப்பத்தை கிளிக் செய்தால் நீங்கள் மானியம் தொடர்பான விவரங்களை பார்க்கலாம். ஷேர் செய்யுங்கள்.

News January 5, 2026

நாகை: 10-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை!

image

திருமருகலை சேர்ந்தவர் கலியபெருமாள். இவரது மகள் சங்கவி (14). இவர் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் இவருக்கு மயக்கம் ஏற்பட மருத்துவகல்லூரிக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், சங்கவி விஷம் குடித்து இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதனை தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சங்கவி நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

error: Content is protected !!