News January 2, 2026

காஞ்சிபுரம்: எந்திரத்தில் தலை சிக்கி கொடூர பலி!

image

உத்திரமேரூர் ஒன்றியம் ரெட்ட மங்கலம் கிஉராமத்தில் டைல்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலையில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஜாய்னர் அபின்(19) என்பவர் வேலை செய்து வந்தார். நேற்று முன் தினம் இரவு 7:30 மணிக்கு எந்திரத்தை இயக்கிக் கொண்டிருக்கும் போது, எதிர்பாராத விதமாக ஜாய்னரின் தலை அதில் சிக்கி, கொடூரமாக பலியானார். இதுகுறித்து உத்திரமேரூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Similar News

News January 15, 2026

காஞ்சி மக்களே.. இனி டிரைவிங் கிளாஸ் இலவசம்!

image

காஞ்சிபுரத்தில் வசிப்பவர்கள், தமிழக அரசின் ‘TN skils’ திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இலவச இரு மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டுநர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் (TNSDC) மூலம் வழங்கப்படும் இந்த பயிற்சிக்கு <>இங்கே கிளிக் <<>>செய்து இணையதளத்தில் பதிவு செய்யலாம். இது பொதுமக்களுக்கு வழங்கப்படும் ஒரு வாய்ப்பாகும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News January 15, 2026

காஞ்சிபுரம்: பொங்கலன்று மின் தடையா..? CLICK HERE

image

பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தின் போது தடையற்ற மின்சாரம் வழங்க காஞ்சிபுரம் மின்சார வாரியம் உறுதி பூண்டுள்ளது. ஒருவேளை மின் தடை ஏற்பட்டால் லைன்மேனைத் தேடி நீங்கள் அலைய வேண்டாம். 94987 94987 என்ற எண்ணிற்கு அழைத்து உங்கள் மின் இணைப்பு எண்ணைக் கூறினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன்மேன் உங்கள் பிரச்னையை சரிசெய்வார். பொங்கல் ஒளிமயமாக அமைய மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க!

News January 15, 2026

காஞ்சிபுரம்: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

image

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, தேவையான பொருட்களுக்கு பதிலாக மற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) காஞ்சிபுரம் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க!

error: Content is protected !!