News January 2, 2026
மயிலாடுதுறையில் மின்தடை அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்டம் பாலையூ மற்றும் மேக்கிரிமங்கலம் ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை (ஜன.03) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறவுள்ளது. எனவே அங்கிருந்து மின்விநியோகம் பெறும் பாலையூர், பருத்திக்காடு, பெரட்டக்குடி, திருவாவடுதுறைம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என பாலையூர் மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் ரேனுகா தேவி தெரிவித்துள்ளார்.
Similar News
News January 15, 2026
மயிலாடுதுறை: குழந்தை வரம் அருளும் திருத்தலம்

மயிலாடுதுறை, திருவாலங்காடு கிரமத்தில் வண்டார் குழலி அம்பிகை சமேத வடாரண்யேசுர சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு வெளிச்சுற்று பிரகாரத்தில் தனிச்சன்னிதியில் புத்திரகாமேஸ்வரர் அருள்பாலித்து வருகிறார். நீண்ட நாள் குழந்தைபேறு வேண்டுவோர் அமாவாசையில் இங்கு சென்று புனித நீராடி புத்திரகாமேஸ்வரர் வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு ஷேர் பண்ணு
News January 15, 2026
மயிலாடுதுறை: தேர்வு கிடையாது-போஸ்ட் ஆபீஸில் வேலை!

மயிலாடுதுறை மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். விருப்பமுள்ளவர்கள் <
News January 15, 2026
மயிலாடுதுறை கலெக்டர் முக்கிய அறிவிப்பு

இளைய தலைமுறையினரின் உடற்கல்வி மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில், ‘இது நம்ம ஆட்டம் 2026’ போட்டிகள் மயிலாடுதுறை மாவட்டத்தில் கோலாகலமாகத் தொடங்க உள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்பும் 16 – 35 வயதுடைய, மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் www.sdat.tn.gov.in அல்லது www.cmyouthfestival.sdat.in வாயிலாக வரும் ஜன.21-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.


