News May 2, 2024

காவல் வாகனங்கள் ஏலம் விட முடிவு

image

கன்னியாகுமரி மாவட்ட போலீஸில் முதிர்ந்த நிலையில் கழிவு
செய்யப்பட்ட காவல் வாகனங்களை பொது ஏலத்தில் விடப்படுகிறது.
வரும் 16.05.2024 அன்று காலை 10 மணிக்கு நாகர்கோவில், மறவன்குடியிருப்பு காவல் ஆயுதப்படை மைதானத்தில் வைத்து ஏலம் நடைபெறும். விருப்பம்
உள்ளவர்கள் 16.05.2024 அன்று ரூ.1000- செலுத்தி ஏலத்தில்எ பங்கேற்கலாம் என மாவட்ட காவல் துறை செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Similar News

News March 5, 2026

குமரி: 300 பவுன் நகையை மோசடி செய்த இளைஞர்.!

image

கருங்கல் அருகே அடகு கடை நடத்தி வந்தவர் அகில். இவர் அந்த பகுதியை சேர்ந்த 75 நபர்களிடம் 300 சவரன் நகை வரை ஏமாற்றி உள்ளார். இது குறித்து பொதுமக்கள் அளித்த புகார் பேரில் கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து தலை மறைவாக இருந்த அகிலை தேடி வந்தனர். இந்த நிலையில் அகிலை போலீசார் நேற்று கைது செய்த நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

News March 5, 2026

நாகர்கோவிலில் டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை.!

image

நாகர்கோவில் கலைநகரை சேர்ந்தவர் டிரைவர் பொன்கேசவன் (40). இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. அடிக்கடி மனைவியிடம் சண்டை போடுவது வழக்கம். நேற்று முன்தினம் குடித்துவிட்டு மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் மனைவி வெளியே சென்று விட்டு திரும்பி வீட்டுக்கு வந்து பார்த்தபோது, பொன்.கேசவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. கோட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

News March 5, 2026

முன் விரோதத்தில் வாலிபர் மீது தாக்குதல்

image

மண்டைக்காடு பகுதியை சேர்ந்தவர் அஜித். இவர் சம்பவத்தன்று வினோ என்பவர் பைக்கில் அதிக ஒளி எழுப்பி சென்றுள்ளார். இதை அஜித் மற்றும் அவரது தந்தை அனந்தகுமார் கண்டித்தனர். இதில் முன் விரோதம் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று பைக்கில் சென்று கொண்டிருந்த அஜித்தை வழிமறித்து வினோ மற்றும் அருள் ராஜன் ஆகியோர் தாக்கி பைக்கை பறித்துள்ளனர். இது குறித்த புகாரில் குளச்சல் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

error: Content is protected !!