News May 2, 2024
11,113 பள்ளிகளில் இணையதள வசதி

தமிழகத்தில் உள்ள 11,113 அரசுப் பள்ளிகளில் இணையதள வசதியை ஏற்படுத்தியுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை உள்ளிட்ட பல்வேறுப் பணிகளை பள்ளிக் கல்வித்துறை துரிதமாக மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், 8030 தொடக்கப் பள்ளிகளிலும், 3083 நடுநிலைப் பள்ளிகளிலும் இணைய வசதியை ஏற்படுத்தி உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 4, 2026
ஒரே போட்டியால் 25 இடங்கள் முன்னேறிய சஞ்சு சாம்சன்!

தொடர் விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதமாக, டி20 WC-ல் WI அணிக்கு எதிரான வாழ்வா சாவா போட்டியில் 97 ரன்கள் குவித்து இந்தியாவை அரையிறுதிக்கு அழைத்து சென்றார் சஞ்சு சாம்சன். இந்நிலையில் ICC டி20 தரவரிசையில் 25 இடங்கள் தாவி 40-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார் சாம்சன். அதேநேரம், சூர்யகுமார் (7), திலக் வர்மா (6), இஷான் கிஷன் (4) மற்றும் அபிஷேக் சர்மா (1) ஆகிய இந்திய வீரர்கள் டாப் 10-ல் இடம்பெற்றுள்ளனர்.
News March 4, 2026
படுத்த படுக்கையில் நடிகை ராஜ்ஸ்ரீ தேஷ்பாண்டே

தனக்கு கிரேடு 1 மார்பகப் புற்றுநோய் உள்ளதாக நடிகை ராஜ்ஸ்ரீ தேஷ்பாண்டே தெரிவித்துள்ளார். ஹாஸ்பிடலில் படுக்கையில் இருந்தவாறான போட்டோவை பகிர்ந்துள்ள அவர், ஆபரேஷனுக்குப் பிறகு அனைவரின் ஆதரவோடும் உலகை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக உணர்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். விரைவில் குணமடைய ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து கமெண்ட் செய்கின்றனர். இவர் ‘தக் லைஃப்’ படத்தில் கனிகா என்ற கேமியோ ரோலில் நடித்துள்ளார்.
News March 4, 2026
மாதம்பட்டி ரங்கராஜிடம் DNA டெஸ்ட் நடத்த அனுமதி!

திருமணம் செய்து தன்னை ஏமாற்றியதாக <<18207032>>ஜாய் கிரிசில்டா<<>> தொடர்ந்த வழக்கில் சென்னை HC உத்தரவிட்டுள்ளது. அதன்படி சென்னை ராஜீவ்காந்தி அரசு ஹாஸ்பிடலில் மாதம்பட்டி ரங்கராஜுக்கு மரபணு (DNA) பரிசோதனை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வழக்கறிஞர் ஆணையரை நியமித்தும், பரிசோதனைக்கு பிறகு மத்தியஸ்தரிடம் அவர் அறிக்கையை சமர்ப்பிக்கவும் HC தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.


