News May 2, 2024
சொன்னதையே திரும்பச் சொல்கிறது பாஜக

சொன்னதையே திரும்பத் திரும்ப பாஜக சொல்வதாக ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் விமர்சித்துள்ளார். இதுகுறித்து கூறிய அவர், பாஜகவிடம் பேச எந்த விசயமும் இல்லாததால், சொன்னதையே திரும்பச் சொல்வதாகக் குற்றம்சாட்டினார். 3,000 பெண்கள் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு இருப்பதாகத் தெரிவித்த தேஜஸ்வி, ஆனால் பிரதமர் மோடியோ பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளானவரை வெளிப்படையாக ஆதரிப்பதாகவும் கூறினார்.
Similar News
News February 6, 2026
தேனி: ரூ.48,480 சம்பளத்தில் SBI வங்கியில் வேலை ரெடி!

தேனி மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 2050 Circle Based Officers (CBO) பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 21 – 30 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் பிப் 18க்குள் இங்கு <
News February 6, 2026
BREAKING: தேர்தல் கூட்டணி.. கிருஷ்ணசாமி அறிவித்தார்

கூட்டணி விவகாரத்தில் ஆட்டம் காட்டி வரும் கிருஷ்ணசாமி, புதிய அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார். தூத்துக்குடியில் பேசிய அவர், கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், விரைவில் வலுவான வெற்றிக் கூட்டணி அமையும் என்றும் கூறினார். குறிப்பாக, புதிய தமிழகம் கட்சிக்கு தனித்தொகுதி மட்டுமின்றி பல தொகுதிகளில் கணிசமான வாக்குகள் இருப்பதால் தென் தமிழகத்தில் அதிகம் போட்டியிடுவோம் என்றார். உங்கள் கருத்து?
News February 6, 2026
திமுக தேர்தல் அறிக்கை.. இதெல்லாம் இடம்பெறுமா?

தேர்தல் நெருங்குவதால் தேர்தல் அறிக்கையை தயார் செய்யும் பணியில் திமுக மும்முரம் காட்டிவருகிறது. இந்நிலையில், இந்த அறிக்கை மார்ச் முதல் வாரத்தில் வெளியாகலாம் என கூறப்படுகிறது. இதில், மகளிர் தொகையை உயர்த்துவது, முஸ்லீம்கள் தனி இடஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்துவது, கல்விக் கடன், தொழில் கடன், முதியோர் உதவித்தொகை உயர்வு உள்ளிட்டவை பற்றி முக்கிய அறிவிப்புகள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


