News January 2, 2026

டெம்போ ஓட்டுநர் டூ ஏர்லைன்ஸ் ஓனர்!

image

கடினமாக உழைத்தால் டெம்போ ஓட்டுநர் கூட ஏர்லைன்ஸ் ஓனர் என்பதே ஷ்ரவன் குமாரின் வாழ்க்கை கதை. UP-ல், நடுத்தர குடும்பத்தில் பிறந்த இவர் டெம்போ ஓட்டி பிழைப்பு நடத்தியுள்ளார். 2014-ல் கனிமம், போக்குவரத்து துறையில் கவனம் செலுத்தி வெற்றிகண்டுள்ளார். இந்நிலையில் Shankh ஏர்லைன்ஸ் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது. மேலும் சாமானியர்களுக்கு விமானப்பயணத்தை எளிதாக்குவதே தனது இலக்கு என்று அவர் கூறியுள்ளார்.

Similar News

News February 17, 2026

வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு வயது வரம்பு உயர்வு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் 23 வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பிக்க வயது வரம்பு 30-லிருந்து 35ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தகுதியுள்ளவர்கள் 19 பிப்ரவரி மாலை 5.45 மணிக்குள் thoothukudi.nic.in இணையதளத்தில் இருந்து விண்ணப்பப் படிவம் பெற்று, மாவட்ட இயக்க மேலாண்மை அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

News February 17, 2026

AI-ல் அடுத்த 2 ஆண்டுகளில் ₹16.6 லட்சம் கோடி முதலீடு!

image

இந்தியா அடுத்த 2 ஆண்டுகளில் AI மற்றும் டேட்டா கட்டமைப்பு தொடர்பான துறைகளில் சுமார் ₹16.6 லட்சம் கோடி முதலீட்டை ஈர்க்கும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதில் ₹5.81 லட்சம் கோடி உறுதி ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், இந்த முதலீடுகளுக்கு நிர்மலா சீதாராமனின் அறிவிப்பு (டேட்டா நிறுவனங்களுக்கு 21 ஆண்டு வரி சலுகை) பெரும் ஊக்கமளிப்பதாக குறிப்பிட்டார்.

News February 17, 2026

புதிய கட்சியை தொடங்கும் பண்ருட்டி ராமச்சந்திரன்

image

OPS-ன் அரசியல் ஆலோசகராக இருந்த பண்ருட்டி ராமச்சந்திரன் பிப்.19-ல் ‘MGR அதிமுக’ என்ற புதுக்கட்சியை தொடங்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக, அதிமுக, பாமகவில் பயணித்த அவர், ‘மக்கள் நல உரிமைக் கழகம்’ என்ற கட்சியை தொடங்கினார். அதன்பின் தேமுதிகவில் இணைந்த அவர், 2011-ல் அதிமுக-தேமுதிக கூட்டணி உருவானதில் முக்கிய பங்கு வகித்தார். பின், மீண்டும் ஜெ., முன்னிலையில் 2014-ல் அதிமுகவில் இணைந்தாா்.

error: Content is protected !!