News January 2, 2026
நயன்தாராவின் செயலால் கோபத்தில் கோலிவுட்

பட விழாக்களில் ஹீரோயின்களுக்கு மரியாதை தரப்படுவதில்லை எனக் கூறி, கடந்த சில ஆண்டுகளாக புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை நயன்தாரா தவிர்த்தார். ஆனால், தற்போது தெலுங்கில் சிரஞ்சீவியுடன் நடிக்கும் படத்தின் பெரும்பாலான புரமோஷன் நிகழ்ச்சிகளில் அவர் முழு ஈடுபாட்டுடன் பங்கேற்று வருகிறார். இதனால், தமிழ் பட புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு ஓரவஞ்சனை செய்வதா என நயனுக்கு எதிராக டோலிவுட்டில் குரல்கள் எழுந்துள்ளன.
Similar News
News January 9, 2026
வரலாற்றில் இன்று

*1788 – அமெரிக்காவின் 5-வது மாநிலமாக கனெடிகட் இணைந்தது.
*1915 – தென்னாப்பிரிக்காவில் இருந்து மகாத்மா காந்தி மும்பை வந்து சேர்ந்தார்.
*1921 – புனித ஜார்ஜ் கோட்டையில் மெட்ராஸ் சட்டமன்றத்தின் முதலாவது கூட்டம் நடைபெற்றது. *1951 – நியூயார்க்கில் ஐநா தலைமையகம் திறக்கப்பட்டது.
*1951 – நடிகர் ஒய். ஜி. மகேந்திரன் பிறந்ததினம்.
*1976 – நடிகர் ராகவா லாரன்ஸ் பிறந்த தினம்.
News January 9, 2026
ஆட்சியில் பங்கு இப்போது முக்கியமல்ல: கார்த்தி சிதம்பரம்

ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்ற கோரிக்கை திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் தரப்பில் வலுவாக வைக்கப்படுகிறது. இதனிடையே அனைத்துக் கட்சிகளுக்கும் ஆட்சியில் தங்களுடைய பிரதிநித்துவம் இருக்க வேண்டும் என விரும்புவார்கள் என கார்த்தி சிதம்பரம் தெரித்துள்ளார். அதேசமயம் தேர்தல் வெற்றிதான் இப்போது முக்கியம் என்பதால், ஆட்சி அதிகாரம் குறித்து தேர்தலுக்கு பின் பேசிக்கொள்ளலாம் எனவும் கூறியுள்ளார்.
News January 9, 2026
வெனிசுலாவின் எண்ணெய் மீதே US-க்கு கண்: டெல்சி ரோட்ரிக்ஸ்

போதைப்பொருள் கடத்தல், மனித உரிமை மீறல் என வெனிசுலா மீது அமெரிக்க வைக்கும் குற்றச்சாட்டுகள் எல்லாம் பொய்யானவை என அந்நாட்டின் இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் ஒரே நோக்கம் வெனிசுலாவின் எண்ணெய் வளத்தை கைப்பற்றுவதுதான் எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். டிரம்பின் புதிய <<18796166>>எண்ணெய் ஒப்பந்த<<>> திட்டத்தால் வெனிசுலா அரசு டிரம்ப் மீது கடும் கோபத்தில் உள்ளது.


