News January 2, 2026
₹2.20 லட்சம் கோடி மாயம்: அன்புமணி

கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவே கடன் வாங்கியதாக DMK அரசு கூறுவது பொய் என அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார். பொறுப்பேற்றது முதல் 2025 மார்ச் வரை ₹3.86 லட்சம் கோடி வாங்கியதாகவும், அதில் மூலதனச் செலவாக ₹1.66 லட்சம் கோடி மட்டுமே பயன்படுத்தியதாகவும் கூறியுள்ளார். RBI புள்ளிவிவரங்களை சுட்டிக்காட்டி, மீதமுள்ள ₹2.20 லட்சம் கோடி கடனை யாருக்கும் பயனளிக்காத வகையில் வீணாக அரசு செலவிட்டுள்ளதாக அவர் சாடியுள்ளார்.
Similar News
News January 28, 2026
வங்கி கடன் குறைகிறது.. HAPPY NEWS

2025-ல் ரெப்போ வட்டி விகிதம் 4 முறை குறைக்கப்பட்டதால், வீடு, வாகனக் கடன் பெற்றவர்கள் மிகவும் பயனடைந்தனர். இந்நிலையில், பிப்.4-ம் தேதி நிதி கொள்கைக் குழு கூட்டம் தொடங்குகிறது. இதில், ரெப்போ வட்டி விகிதம் மேலும், 0.25% குறைக்கப்படும் என பேங்க் ஆஃப் அமெரிக்கா கணித்துள்ளது. அப்படி நடந்தால், ஃபுளோட்டிங் வட்டி விகிதத்தை தேர்வு செய்து கடன் பெற்றவர்களுக்கு EMI தொகை குறைக்கப்படும். SHARE IT.
News January 28, 2026
துணை முதல்வர் அஜித் பவார் காலமானார்.. கடைசி போட்டோ

மகாராஷ்டிரா DCM அஜித் பவார் விமான விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்நிலையில், விமானம் புறப்படும் முன்பாக அஜித் பவார், தனது பாதுகாப்பு அதிகாரியுடன் எடுத்துக்கொண்ட போட்டோ ஒன்று SM-ல் வைரலாகிறது. ஆனால், இந்த போட்டோவின் உண்மைத்தன்மை உறுதியாக தெரியவில்லை. முன்னதாக, கைக்கடிகாரங்கள் மற்றும் ஆபரணங்களை வைத்து அஜித் பவாரின் உடல் அடையாளம் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
News January 28, 2026
விஜய்யுடன் என்னை ஒப்பிட வேண்டாம்: சரத்குமார்

உங்களை போல கட்சியை கலைக்கும் நிலை விஜய்க்கும் ஏற்படுமா என கேட்கப்பட்டதற்கு சரத்குமார் விளக்கம் அளித்துள்ளார். அதற்கு தான் 17 ஆண்டுகள் கட்சியை நடத்தியதாகவும், விஜய்யுடன் தன்னை ஒப்பிட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். மேலும் தான் கட்சியை கலைக்கவில்லை என கூறிய அவர், தேசிய நீரோட்டத்தில் இணைந்து கொண்டதாகவும் விவரித்தார்.


