News January 2, 2026
புதுவை: மானியம் பெறும் விவசாயிகள் பட்டியல் வெளியீடு

புதுவை, அரசு வேளாண்துறை கூடுதல் வேளாண் இயக்குனர் சண்முகவேலு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2025-ல் தோட்டக்கலைப்பயிர் சாகுபடி செய்து விண்ணப்பித்த விவசாயிகளின் பெயர் பட்டியல், சமுதாய தணிக்கை செய்வதற்காக, புதுவை பிராந்தியத்தின் சம்பந்தப்பட்ட உழவர் உதவியகங்களின் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ளது. வரும் 9ந் தேதி வரை இதில் ஆட்சேபனைகள் இருந்தால் தெரிவிக்கலாம் என்றார்.
Similar News
News January 12, 2026
புதுச்சேரி: 4 பேருக்கு 72 ஆயிரம் மோசடி

புதுச்சேரி, கோரிமேடை சேர்ந்த நபரை மொபைல் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர், கிரெடிட் கார்டு லிமிட்டை உயர்த்தி தருவதாக ஆசை வார்த்தை கூறி மோசடி செய்தார். கார்டு விவரங்களை அளித்ததும், அவரது வங்கிக் கணக்கில் இருந்து 45,351 மாயமானது. இதேபோல் பாகூர் நபர் 20,000, ரெட்டியார்பாளையம் பெண் 4,200, புதுச்சேரி பெண் 3,398 என மொத்தம் 72,941 இழந்தனர். இது குறித்து சைபர் கிரைம் போலீஸ் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
News January 12, 2026
புதுவை: வாக்காளர்களே உடனே செக் பண்ணுங்க!

புதுவை மக்களே, உங்கள் VOTER ID பழசாவும், சேதமடைந்தும் காணப்படுகிறதா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாற்ற இதை பண்ணுங்க..
1. இங்கு <
2. உங்க VOTER ID (EPIC) எண் மற்றும் மாநிலத்தை பதிவிடுங்க. உங்க போனுக்கே VOTER ID வந்துடும்.
3. இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை.
இதனை மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க…
News January 12, 2026
புதுச்சேரி: வீட்டில் இருந்த மீனவர் உயிரிழப்பு

புதுவை மணவெளி அண்ணா நகர் சேகர் மீனவர், இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் இருந்தவர்கள் வெளியில் சென்றபோது, அவர் மட்டும் தனியாக இருந்தார். நாற்காலியில் உட்கார்ந்திருந்த அவர், கீழே விழுந்து சுயநினைவின்றி இறந்து கிடந்தார். புகாரின் பேரில், அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


