News January 2, 2026

தாக்கப்பட்ட வடமாநில வாலிபர் இறந்துவிட்டாரா?- அரசு விளக்கம்

image

திருத்தணி ரயில் நிலையம் அருகே ஒடிசா வாலிபர் (டிச.27) மீது கஞ்சா போதையில் 4 பேர் கொடூரமாக தாக்கியதில் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார் சமூக வலைத்தளங்களில் அவர் இறந்துவிட்டார் என தகவல் பரவியது. இதுகுறித்து தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில், பாதிக்கப்பட்டவர் சிகிச்சை பெற்று ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டகாக கூறப்பட்டுள்ளது.

Similar News

News January 31, 2026

திருவள்ளூர்: இரவு ரோந்து காவல் அதிகாரி எண்கள்!

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 7 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News January 31, 2026

திருவள்ளூர்: பெண்களுக்கு தள்ளுபடியுடன் ரூ.3 லட்சம் கடன்!

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு கடன் வழங்கப்படும். இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <>இங்கே கிளிக்<<>> செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். (ஷேர் பண்ணுங்க)

News January 31, 2026

அரக்கோணம்–திருத்தணி இடையே சிறப்பு ரயில்

image

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் நாளை தைப்பூசத் திருவிழா கொண்டாடப்படும் நிலையில், அரக்கோணம்–திருத்தணி இடையே நாளை சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனை மக்கள் பயன்படுத்திக் கொள்ள ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!