News January 2, 2026

குடியரசுத் துணைத் தலைவர் இன்று சென்னை வருகிறார்

image

குடியரசுத் துணைத் தலைவர் சிபி. ராதாகிருஷ்ணன் பதவி ஏற்ற பிறகு அவருக்கு சென்னையில் பாராட்டு விழா நடத்துவதற்கு ஏற்பாடுகள் நடந்தன. 2 முறை அந்த நிகழ்ச்சி தள்ளிப்போன நிலையில், இன்று (ஜன.2) நடைபெறுகிறது. பாஜக சார்பில் நடத்தப்படும் இந்த விழா, கலைவாணர் அரங்கில் மாலை 5 மணிக்கு தொடங்குகிறது. இதற்காக சிபி. ராதாகிருஷ்ணன் சென்னை வருகிறார். அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க பாஜக ஏற்பாடு செய்துள்ளது.

Similar News

News January 5, 2026

சென்னையில் மனதை உலுக்கும் கொடூரம்

image

சென்னை கொளத்தூர் பகுதியில் சைக்கிளை பழுது பார்க்க 14 வயது சிறுவன் சென்றுள்ளான். சிறுவனிடம் சைக்கிள் பழுதுபார்க்கும் கடைக்காரர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். அலறி அடித்து வீட்டுக்கு ஓடிவந்த சிறுவன் பெற்றோரிடம் தனக்கு நேர்ந்த கொடுமையை கூறியுள்ளார். புகாரின் பேரில் போக்சோ வழக்கில் கடைக்காரர் கைதாகியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News January 5, 2026

JUST IN: சென்னையில் காதலிக்க மறுத்த பெண்ணை கொல்ல முயற்சி

image

சென்னை நெற்குன்றத்தில் சிலம்பரசன் என்ற நபர் கல்லூரி மாணவி ஒருவரை 3 மாதங்களாக தன்னை காதலிக்குமாறு தொடர்ந்து டார்ச்சர் செய்து வந்துள்ளார். மேலும், மதுபோதையில் இருந்த அவர், இன்று காலை காயப்போட துணியை எடுக்க சென்ற மாணவியை மாடியில் இருந்து தள்ளி விட்டு கொல்ல முயற்சித்துள்ளார். சுயநினைவின்றி கிடந்த மாணவிக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News January 5, 2026

சென்னை அருகே கோர விபத்து; 2 பேர் உடல் நசுங்கி பலி

image

திலீப், ஸ்டான்லி மற்றும் நீர்ஜ் ஆகியோர் நேற்று காலை பெங்களூருவில் இருந்து சென்னைக்கு வேலை நிமித்தமாக மினி டெம்போவில் வந்து கொண்டிருந்தனர்.சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது மாம்பாக்கம் அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரமாக நிறுத்தி வைத்திருந்த டாரஸ் லாரியின் பின்பகுதியில் டெம்போ பயங்கரமாக மோதியது. இதில் திலீப், ஸ்டா–லின் இருவரும் உடல் நசுங்கி அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

error: Content is protected !!