News January 2, 2026

குடியரசுத் துணைத் தலைவர் இன்று சென்னை வருகிறார்

image

குடியரசுத் துணைத் தலைவர் சிபி. ராதாகிருஷ்ணன் பதவி ஏற்ற பிறகு அவருக்கு சென்னையில் பாராட்டு விழா நடத்துவதற்கு ஏற்பாடுகள் நடந்தன. 2 முறை அந்த நிகழ்ச்சி தள்ளிப்போன நிலையில், இன்று (ஜன.2) நடைபெறுகிறது. பாஜக சார்பில் நடத்தப்படும் இந்த விழா, கலைவாணர் அரங்கில் மாலை 5 மணிக்கு தொடங்குகிறது. இதற்காக சிபி. ராதாகிருஷ்ணன் சென்னை வருகிறார். அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க பாஜக ஏற்பாடு செய்துள்ளது.

Similar News

News January 11, 2026

சென்னை: ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு!

image

முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 1 குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு 1800 425 3993 அழைக்கவும். ஷேர் பண்ணுங்க.

News January 11, 2026

சென்னை: ஒரு ‘Hi’ போதும், வங்கி விவரங்கள் Whatsapp-இல்!

image

சென்னை மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்! 1. SBI – 90226 90226, 2. Canara Bank – 90760 30001, 3. Indian Bank – 87544 24242, 4. IOB – 96777 11234, 5. HDFC – 70700 22222. மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.

News January 11, 2026

JUST IN: மெரினாவில் இதை செய்தால் ரூ.5,000 அபராதம்

image

சென்னையில் உள்ள மெரினா கடற்கரையை மேம்படுத்த சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி, கடற்கரையை தூய்மையாக பராமரிக்கவும், கடல் வளத்தை பாதுகாக்கும் வகையிலும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், ‘மெரினாவில் கடை வைத்திருப்போர் மற்றும் சுற்றுலா பயணிகள் குப்பைகளை கொட்டக்கூடாது. விதிகளை மீறி குப்பை கொட்டினால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும்’ என கூறியுள்ளது.

error: Content is protected !!