News January 2, 2026
கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று(ஜன.1) இரவு 10 மணி முதல் இன்று(ஜன.2) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 19, 2026
கடலூர்: ரூ.25 கோடிக்கு விற்பனை – புதிய உச்சம்!

கடலூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகை விமர்சியாக கொண்டாடப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் 135 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இவற்றில் ஜனவரி 14,15 மற்றும் 17 ஆகிய மூன்று நாட்களில் மட்டும், ரூ.25.29 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையானது. இது கடந்த ஆண்டை விட 2 கோடியே 46 லட்சம் அதிகம் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆண்டுதோறும் புதிய உச்சம் தொடும் மது விற்பனை கடலூர் மாவட்ட மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
News January 19, 2026
கடலூர்: நடந்து சென்றவர் மீது பைக் மோதி சாவு

கீரப்பாளையம் மெயின் ரோடு தெருவை சேர்ந்தவர் குருசாமி (63) நேற்று கீரப்பாளையத்தில் இருந்து புவனகிரி நோக்கி வெள்ளாற்று பாலத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த பைக் மோதியதில், பலத்த காயம் அடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். பைக் ஓட்டிய வினோத் குமார் (25) என்பவர் மீது புவனகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 19, 2026
கடலூர்: டாஸ்மாக் பாரில் கொலை வெறி தாக்குதல்

வேப்பூர் அருகே அடரி கிராமத்தில் உள்ள டாஸ்மாக் பாரில் அமர்ந்து நேற்று (ஜன.18) ஈரியூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன், சுபாஷ் ஆகியோர் மது அருந்தியுள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில், மது பாட்டிலை உடைத்து ஒருவருக்கொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதில் இருவரும் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து வேப்பூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


