News May 2, 2024
₹7,961 கோடி மதிப்பிலான ₹2,000 நோட்டுகள் திரும்பவில்லை

நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த ₹7,961 கோடி மதிப்பிலான ₹2,000 நோட்டுகள் திரும்பி வரவில்லை என்று RBI தெரிவித்துள்ளது. நாட்டில் புழக்கத்தில் இருந்த ₹2,000 நோட்டுகளைத் திரும்பப் பெறுவதாக RBI 2023 மே மாதம் அறிவித்தது. அப்போது ₹3.56 லட்சம் கோடி மதிப்பு ₹2,000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. அதில் 97.76% திரும்பி வந்து விட்டதாகவும், 2.24% திரும்பவில்லை என்றும் RBI தெரிவித்துள்ளது.
Similar News
News January 30, 2026
விராட் கோலியை காணவில்லை என ரசிகர்கள் புகார்!

இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் இன்ஸ்டாகிராம் கணக்கை காணவில்லை என்ற ஸ்கிரீன் ஷாட்களை ரசிகர்கள் SM இல் பதிவிட்டு வருகின்றனர். கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதா அல்லது கோலி தானே இன்ஸ்டாகிராமில் இருந்து வெளியேறினாரா என ரசிகர்கள் குழம்பி வருகின்றனர். அவரை இன்ஸ்டாகிராமில் 274 மில்லியன் பேர் பாலோ செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
News January 30, 2026
ஆண்டுக்கு ₹10,000… இந்த தேர்வை மிஸ் பண்ணிடாதீங்க!

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 10-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு முதல்வரின் திறனாய்வுத் தேர்வு நாளை நடைபெறுகிறது. இதில் தேர்ச்சி பெறும் 1,000 மாணவ, மாணவிகளுக்கு, பிளஸ் 2 முடிக்கும் வரை ஆண்டுக்கு ₹10,000 வீதம் உதவித் தொகை வழங்கப்படும். இதற்கான முதல் தாள் (கணிதம்) தேர்வு நாளை காலை 10-12 மணி வரையும், 2-ம் தாள் (அறிவியல், சமூக அறிவியல்) தேர்வு மதியம் 2-4 மணி வரையும் TN முழுவதும் நடைபெறுகிறது.
News January 30, 2026
திமுக சிறுபான்மை மக்களின் பாதுகாவலனா? சீமான்

சிறுபான்மை மக்களின் பாதுகாவலன் என்று சொல்லியே மக்களை பெரும் அச்சத்தில் வைத்திருப்பதாக திமுகவை சீமான் விமர்சித்தார். மேலும், ஒரு இந்து முஸ்லீமை திருமணம் செய்ததால் சிறுபான்மையா என்றவர், தாய் மாமன் ரஹ்மான் சிறுபான்மை, மருமகன் ஜிவி பிரகாஷ் பெரும்பான்மையா, இளையராஜா பெரும்பான்மை, அவர் மகன் யுவன் சிறுபான்மையா எனவும் கேள்வி எழுப்பினார். 134 நாடுகளில் வாழும் பேரின மக்கள் தமிழர்கள் எனவும் கூறினார்.


