News January 1, 2026
தவெக கூட்டணியில் விசிக வருகிறதா? KAS பதில்

விஜய் மக்கள் சக்தியோடு CM-ஆக வருவார் எனவும், அதை எந்த சக்தியாலும் தடுத்து விட முடியாது என்றும் KAS தெரிவித்துள்ளார். திருப்பூரில் இன்று பேசிய அவர், <<18721651>>திருமா<<>> பேச்சால் திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அடுத்து என்ன நடக்கும் என்பதற்கு காலம் தான் பதில் சொல்லும். மேலும், தவெக கூட்டணியில் விசிக வருகிறதா என்பதை விட, விசிக தொண்டர்கள் அனைவரும் தவெகவிற்கு வருகிறார்கள் என்பதே உண்மை எனத் தெரிவித்தார்.
Similar News
News January 14, 2026
மன அழுத்தத்தால் நெஞ்செரிச்சல் ஏற்படுமா?

உணவுகள் மட்டுமே நெஞ்செரிச்சலுக்கு காரணம் என நினைத்திருப்போம். ஆனால், மன அழுத்தத்தாலும் நெஞ்செரிச்சல் அதிகமாக ஏற்படுவதாக டாக்டர்கள் கூறுகின்றனர். மன அழுத்தத்தில் இருக்கும் போது நம்முடைய வயிற்றில் உள்ள அமில உற்பத்தியை, உடல் அதிகரிக்க செய்கிறது. இதனால் ஜீரண செயல்பாடு சரியாக நடக்காமல், நெஞ்செரிச்சல் ஏற்படுவதாக டாக்டர்கள் கூறுகின்றனர். எனவே, மன அழுத்தத்தை குறைக்க முயற்சி செய்ய அறிவுறுத்தியுள்ளனர்.
News January 14, 2026
பொங்கல் பண்டிகை: இன்று முதல் தள்ளுபடி

Railone செயலி மூலம் முன்பதிவில்லா டிக்கெட்களை புக் செய்யும் போது, 3% தள்ளுபடி வழங்கும் திட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது. இச்சிறப்பு சலுகை வரும் ஜூலை 14-ம் தேதி வரை வழங்கப்படும். பெரும்பாலானோர் ரயில் டிக்கெட் புக் செய்ய IRCTC ஆப்பை பயன்படுத்தி வருகின்றனர். RailOne ஆப்பின் பயன்பாட்டை அதிகரிக்க இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் அனைவரும் பயன்பெற அதிகளவில் ஷேர் பண்ணுங்க.
News January 14, 2026
திமுகவா? தவெகவா? குழப்பத்தில் காங்கிரஸ்!

TN-ல் பல ஆண்டுகளாக ஆட்சியில் பங்கு இல்லாமல் இருக்கும் காங்., 2026 தேர்தலில் ஆட்சியில் பங்கு பெறுவதில் உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்., மூத்த தலைவர்கள் வெற்றியை உறுதி செய்ய திமுக கூட்டணியே சிறந்தது என்கின்றனர்; ஆனால், இளம் தலைவர்களோ தவெகவிடம் 75 இடங்கள் வரை பெறுவதோடு, ஆட்சியில் பங்குபெறலாம் என கருதுவதாக கூறப்படுகிறது. இதனால், காங்.,-ல் குழப்பம் நீடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


