News January 1, 2026

2025-ல் AI செய்த சிறப்பான சம்பவங்கள்

image

2025-ல் AI, வெறும் சக்திவாய்ந்த தொழில்நுட்பமாக மட்டும் பிரபலமடையவில்லை. உணர்ச்சி, படைப்பாற்றல், நகைச்சுவை, எளிதாக அணுகும்முறை ஆகியவற்றால் டிரெண்டானது. இந்த தொழில்நுட்பம் மனிதத்தன்மை வாய்ந்ததாக உணரப்பட்டது. அந்த வகையில் எதுவெல்லாம் டிரெண்டானது என்று, மேலே உள்ள போட்டோக்களை ஸ்வைப் செய்து பாருங்க. இதில் நீங்கள் எதை என்ஜாய் செய்தீங்க? கமெண்ட்ல சொல்லுங்க. SHARE.

Similar News

News February 3, 2026

அதிருப்தியால் அண்ணாமலை விலகலா?

image

தந்தையின் உடல்நிலையை காரணம் காட்டி, தொகுதி பொறுப்பாளர் பதவியிலிருந்து <<19037307>>விலகுவதாக <<>>அண்ணாமலை அறிவித்திருந்தார். இந்நிலையில், பொறுப்பாளர்கள் நியமனத்தில் நயினார் தன்னிச்சையாக செயல்பட்டதாலும், தனக்கு சம்பந்தமில்லாத தொகுதிகளை ஒதுக்கியதாலும், அதிருப்தியடைந்த அண்ணாமலை பதவியில் இருந்து விலகியதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே, இருவருக்கும் இடையே உரசல் இருப்பதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

News February 3, 2026

பிரபல இசையமைப்பாளர் காலமானார்.. கண்ணீர் அஞ்சலி

image

பழம்பெரும் இசையமைப்பாளர் SP வெங்கடேஷ்(70) மாரடைப்பால் காலமானார். கிட்டார் கலைஞராக இசைப் பயணத்தை தொடங்கிய அவர், தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட 250-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். ‘உனக்காக என் காதல்’, ‘பிஞ்சு மனசு’ உள்ளிட்ட தமிழ் படங்களுக்கு இசையமைத்துள்ள வெங்கடேஷ், ஃபிலிம்ஃபேர் உள்ளிட்ட விருதுகளையும் பெற்றுள்ளார். அவரது இறுதிச் சடங்கு சென்னையில் நாளை நடைபெறவுள்ளது. RIP

News February 3, 2026

வரியை குறைக்க வைத்த இந்தியாவின் ராஜதந்திரம்

image

இந்தியாவை ‘Tariff King’ என விமர்சித்த US அதிபர் டிரம்ப், தற்போது நண்பர் என்று கூறி வரியை குறைத்துள்ளார். US-ன் கூடுதல் வரிவிதிப்புக்கு பிறகு இந்தியா, ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்தது போன்றவை USA-ஐ கலங்கடித்திருக்கலாம் எனப்படுகிறது. அதன் காரணமாகவே, US அதிபர் வரியை 50%-ல் இருந்து 18%-ஆக குறைத்து அறிவித்துள்ளார் எனவும் கூறப்படுகிறது.

error: Content is protected !!