News January 1, 2026
கள்ளக்குறிச்சி: ரூ.50 கட்டினால் ரூ.1 லட்சம் கிடைக்கும்

கள்ளக்குறிச்சி போஸ்ட் ஆபிஸில் உள்ள RD திட்டத்தில் தினமும் ரூ.50 என்ற அடிப்படையில் மாதம் ரூ.1,500 கட்டினால், 5 ஆண்டு முடிவில் 6.7% வட்டியுடன் 1,07,050 ரூபாயை பெற்றுக் கொள்ளலாம். இதே போல் 100 ரூபாய் என்ற வீதத்தில் சேமித்தால் 2,12,972 ரூபாயை பெற்றுக் கொள்ளலாம். எதிர்காலத்தில் இந்த தொகை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இத்திட்டத்தில் இணைய அருகில் உள்ள போஸ்ட் ஆபிஸ் அலுவலகத்தை அனுகவும். (SHARE)
Similar News
News January 15, 2026
கள்ளக்குறிச்சி: கணவன் தொல்லையா? உடனே CALL!

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு எதிராக வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபடி, கள்ளக்குறிச்சி மாவட்ட பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 9094055559-ஐ அழைத்து புகார் அளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News January 15, 2026
கள்ளக்குறிச்சி: மனைவிக்காக சென்ற கணவன் துடிதுடித்து பலி!

கூத்தக்குடியை சேர்ந்த அலெக்சாண்டர் (35), தனது மனைவியை கூப்பிட நேற்று பைக்கில் சென்றுள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் (17) & 2 பேர் வந்த பைக், அலெக்சாண்டர் பைக் மீது மோதியது. இதில் அலெக்சாண்டர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், படுகாயமடைந்த 3 பேரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே ஸ்ரீகாந்த் பலியானார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
News January 15, 2026
கள்ளக்குறிச்சியில் பகீர் – இளம்பெண் கடத்தல்!

கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். நேற்று வீட்டில் தனியாக இருந்த அவரை திடீரென காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடியள்ளனர். அப்போது, புதுப்பாலப்பட்டை சேர்ந்த மணிவேல் (30) அந்த பெண்ணை கடத்திச் சென்றது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவர்கள் அளித்த புகாரின் பேரில், மணிவேல் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


