News January 1, 2026

எதிரிகளின் வியூகங்களை தகர்க்க வேண்டும்: ஸ்டாலின்

image

தமிழ்நாட்டை வஞ்சித்து வரும் மத்திய பாஜக அரசுக்கு எதிராக தொடர்ந்து உறுதியாக போராடிக் கொண்டிருப்பதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஒரு கையில் வாளை ஏந்தி, உரிமை போர்க்களத்தில் நிற்கிறோம்; மறு கையில் கேடயத்தை ஏந்தி மக்கள் நலனை பாதுகாக்கிறோம். தமிழக மக்கள் படை நமக்கு ஆதரவாக உள்ளது. அதைச் சிதறடிக்க வேண்டும் என்ற எதிரிகளின் வியூகங்களை தகர்த்தெறிந்து, ஜனநாயகப் போர் கலத்தில் வெற்றிபெற வேண்டும் என்றார்.

Similar News

News January 25, 2026

திமுக கூட்டணியில் தேமுதிக, ராமதாஸ்?

image

2026 தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் பிரேமலதாவும், ராமதாஸும் இதுவரை கூட்டணி குறித்து முடிவெடுக்காமல் உள்ளனர். இந்நிலையில், தேமுதிகவுக்கு 6 சீட், ராமதாஸ் பாமகவுக்கு 3 சீட் என அமைச்சர் எ.வ.வேலு பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. குறைவான சீட்கள் என்றாலும் தேர்தலுக்காக சகலமும் செய்து தருவதாக உத்தரவாதம் அளித்துள்ளதால் பிரேமலதாவும், ராமதாஸும் கூட்டணிக்கு ஓகே சொல்ல தயாராகிவிட்டார்களாம்.

News January 25, 2026

ஜன நாயகன்.. காலையிலேயே வந்த மகிழ்ச்சி செய்தி

image

‘ஜன நாயகன்’ சென்சார் வழக்கின் மீதான தீர்ப்பு நாளை மறுநாள் (ஜன.27) வெளியாகவுள்ளது. ஒருவேளை படத்திற்கு சாதகமான தீர்ப்பு வந்தால், பிப்ரவரி 2-வது வாரத்திலோ (அ) மார்ச் முதல் வாரத்திலோ படத்தை வெளியிட வாய்ப்புள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், இது விஜய்யின் கடைசி படம் என்பதால், தமிழகம் அதிர மாநிலம் முழுவதும் 1,000 தியேட்டர்களில் வெளியிடவும் படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.

News January 25, 2026

ஹாட்ரிக் வெற்றி பெறுமா இந்தியா?

image

இந்தியா, நியூசிலாந்து இடையிலான 3-வது டி20 இன்று கவுஹாத்தியில் நடைபெறவுள்ளது. முதல் டி20-ல் 48 ரன்கள் வித்தியாசத்திலும், 2-வது டி20-ல் 7 விக்கெட் வித்தியாசத்திலும் இந்தியா அபார வெற்றி பெற்றது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் இந்தியா, இப்போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. அதேநேரத்தில், புதிய உத்திகளுடன் NZ களமிறங்கவுள்ளது.

error: Content is protected !!