News January 1, 2026

மயிலாடுதுறையில் 1337 சிசிடிவிகள் பொருத்தம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 2025ம் ஆண்டில் 8 பெருங்கொள்ளை குற்ற வழக்குகள் உள்ளிட்ட 98 திருட்டு குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதில் சம்பந்தப்பட்ட 104 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருடு போன ரூ.81,82,000 மொத்த சொத்து மதிப்பில் ரூ.63,85,750 மதிப்புள்ள சொத்துக்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்டத்தில் புதிதாக 1337 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

Similar News

News January 2, 2026

மயிலாடுதுறை: இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

image

தென்மேற்கு வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நாகை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (ஜன.2) மதியம் 1 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

News January 2, 2026

மயிலாடுதுறை: பொங்கல் பரிசு… முக்கிய அறிவிப்பு!

image

தமிழக அரசால் ஆண்டுதோறும் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. அப்படி உங்களுக்கு வழங்கப்படும் பொருட்கள் தரமில்லாமலோ அல்லது சரியாக வந்து சேரவில்லை என்றால் ‘1800 425 5901’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு அலைச்சல் இல்லாமல் உங்களால் புகார் அளிக்க முடியும். மேலும் இந்த எண்ணின் மூலமாக ரேஷன் கடை மற்றும் ரேஷன் பொருட்கள் குறித்தும் நீங்கள் புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News January 2, 2026

மயிலாடுதுறை: ரூ.2.5 கோடிக்கு மது விற்பனை; புதிய உச்சம்!

image

பண்டிகை காலங்களில் வழக்கமாக டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்களின் கூட்டம் அலைமோதும். இந்நிலையில் புத்தாண்டையொட்டி மயிலாடுதுறை மற்றும் நாகை மாவட்டத்தில் அமைந்துள்ள மதுக்கடைகளில் நேற்று முன்தினம் மட்டும் ரூ.2 கோடியே 58 லட்சத்துக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.26 லட்சம் அதிகமாகும். கடந்த ஆண்டு டிசம்பர் 31-ந்தேதி ஒரே நாளில் மொத்தம் ரூ.2.32 கோடி விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!