News January 1, 2026
வெந்நீரில் வாழும் இந்த அதிசய மீனை பற்றி தெரியுமா?

USA, நெவாடா பாலைவனத்தில் ஒரு சிறிய பாறை இடுக்கிற்குள் வாழும் ‘Devils Hole pupfish’ மீன்கள் அறிவியலுக்கே சவால் விடுகின்றன. வெறும் கட்டைவிரல் அளவே உள்ள இவை, 34°C கொதிக்கும் வெந்நீரில் ஆக்சிஜன் இல்லாமலே உயிர்வாழும் Paradoxical Anaerobism என்ற விந்தையை கொண்டுள்ளன. உலகின் மிகச்சிறிய இடத்தில் வாழும் இந்த முதுகெலும்புயிரி, மரபணு சவால்களை மீறி பல நூற்றாண்டுகளாக உயிர்வாழ்வது ஒரு தீராத உயிரியல் மர்மம்!
Similar News
News January 15, 2026
நெல்லை: கம்பால் தாக்கிய நபர் கைது

நெல்லை டவுன் தமிழ் சங்கம் தெருவைச் சேர்ந்தவர் பீர் முகமது. இவருக்கும், மேலகருங்குளம் சிவாஜி நகரை சேர்ந்த செல்லப்பாவிற்கும் கொடுக்கல் வாங்கல் பிரச்னை தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த செல்லப்பா இரும்பு கம்பியால் பீர்முகமதுவை தாக்கினார். இது குறித்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்லப்பாவை கைது செய்தனர்.
News January 15, 2026
திமுக அரசின் மீதான கரும்புள்ளி: நயினார்

ஆசிரியர் விஷம் குடித்து <<18857511>>தற்கொலை <<>>செய்துகொண்டது வேதனையளிப்பதாக நயினார் இரங்கல் தெரிவித்துள்ளார். ‘உங்க கனவ சொல்லுங்க’ என விளம்பர நாடகம் போடும் CM ஸ்டாலின், நியாயமான கோரிக்கைகளுக்காக போராடிய ஆசிரியர் கண்ணன் வாழ்நாள் கனவிற்கு செவிமடுக்காமல் போனதன் விளைவுதான் இந்த துர்மரணம். இது திமுக அரசின் மீதான கரும்புள்ளி. திமுகவின் அப்பட்டமான நம்பிக்கை துரோகத்திற்கு 2026-ல் முடிவு கட்டப்படும் என்றார்.
News January 15, 2026
தமிழகம் முழுவதும் நாளை டாஸ்மாக் கடைகள் இயங்காது

திருவள்ளுவர் தினமான நாளை அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை மீறி, டாஸ்மாக், பார்கள் திறந்தாலோ, கள்ளச்சந்தையில் விற்றாலோ சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அதாவது, இன்று இரவு 10 மணி முதல் ஜன.17 பிற்பகல் 12 மணி வரை மது வாங்க முடியாது. இதன் காரணமாகவும், பொங்கல் பண்டிகை என்பதாலும், இன்று டாஸ்மாக் கடைகள் திறந்த உடனே கூட்டம் அலைமோதுகிறது.


