News January 1, 2026
TN-ன் நிதி பற்றாக்குறை குறைந்து வருகிறது: ப.சிதம்பரம்

ஒரு மாநிலத்தின் கடனை வைத்து அதன் பொருளாதார நிலையை மதிப்பிடுவது பிழையானது என ப.சிதம்பரம் கூறியுள்ளார். <<18700197>>பிரவின் சக்ரவர்த்தியின்<<>> கருத்துக்கு பதிலளித்த அவர், TN-ன் நிதி பற்றாக்குறை ஒவ்வொரு ஆண்டும் குறைக்கப்பட்டு வருவதாக பாராட்டியுள்ளார். மேலும், மொத்த உற்பத்தியில் மொத்தக் கடன் எத்தனை சதவீதம் என்பதே பொருத்தமான அளவை எனவும், TN-ல் இந்த அளவையானது, தொடர்ந்து நிலையாக இருந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 15, 2026
புத்தர் பொன்மொழிகள்

*நீங்கள் ஒருவரின் வாழ்வில் விளக்கேற்றினால், அது உங்கள் பாதையையும் பிரகாசமாக்கும். *நமக்கு நடக்கும் அனைத்துக்கும் காரணம், நாம் நினைத்த, சொன்ன அல்லது செய்தவற்றின் விளைவாகும். *எல்லோருடைய வாழ்க்கையும் நிரந்தரமற்றது. பிறகு ஏன் நிரந்தரமற்ற விசயங்களுக்காக கவலைப்பட வேண்டும். *நாம் எங்கு சென்றாலும், எங்கிருந்தாலும், நமது செயல்களுக்கான விளைவுகள் நம்மைப் பின்தொடர்கின்றன.
News January 15, 2026
ரோஹித்தை பின்னுக்கு தள்ளி NO.1 ஆன கோலி!

நியூஸி.,க்கு எதிரான முதல் போட்டிக்கு பிறகு ODI பேட்ஸ்மன் தரவரிசை பட்டியலை ICC அப்டேட் செய்துள்ளது. அதில், உலகின் நம்பர் 1 ODI பேட்ஸ்மனாக ரோஹித்தை பின்னுக்கு தள்ளி விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார். 4 ஆண்டுகளுக்கு பிறகு அவர் முதலிடத்தை தக்க வைத்துள்ளார். அவர் இதுவரை 11 முறை நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளார். மேலும், முதலிடத்தில் இருந்த ரோஹித் 3-வது இடத்திற்கு பின் தங்கியுள்ளார்.
News January 15, 2026
4 கணவர்களை வச்சிக்கலாம் என தேர்தல் வாக்குறுதி!

தாய்லாந்து PM வேட்பாளர் மோங்கோல்கிட் சுக்சிந்தரனோன், ஒரு விநோதமான தேர்தல் வாக்குறுதியை கொடுத்துள்ளார். அதன்படி, தனது ஆட்சியில் தாய்லாந்து பெண்கள் 4 கணவர்கள் வரை கொண்டிருக்கலாம் எனவும், முக்கியமாக, அது 4 பேரின் பரஸ்பர சம்மதத்துடன் இருக்க வேண்டும் என்றும் அவர் அறிவித்துள்ளார். பாலின சமத்துவத்தை பேணவே இத்தகைய வாக்குறுதியை அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இத பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?


