News January 1, 2026

தஞ்சாவூர்: இலவச தையல் மிஷின் வேண்டுமா?

image

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு தஞ்சாவூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE பண்ணுங்க!

Similar News

News January 7, 2026

தஞ்சை: பொங்கல் பரிசு வரலையா..? உடனே CALL!

image

தஞ்சை மக்களே, பொங்கல் பரிசுத் தொகுப்புடன் சேர்த்து ரூ.3000 பணத்தை, வரும் ஜன.13-ம் தேதிக்குள் அனைவருக்கும் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இதனை பெறுவதில் ஏதாவது சிக்கல் ஏற்பட்டாலோ, ஸ்டாக் இல்லை என அலுவலர்கள் பதிலளித்தாலோ அல்லது டோக்கன்கள் வீடுகளுக்கு சென்று வழங்கப்படாமல் இருந்தால், உடனே 1967 (அ) 1800-425-5901 என்ற எண்ணை தொடர்பு கொண்டு நீங்கள் புகார் அளிக்கலாம். SHARE பண்ணுங்க!

News January 7, 2026

தஞ்சாவூரில் 385 பேர் கைது

image

அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்கக் கோரி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகம் முன்பு நேற்று தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தினர் மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில், மறியலில் ஈடுபட்ட 385 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால், அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.

News January 7, 2026

தஞ்சை: ஸ்டவ் வெடித்து டீ வியாபாரி உயிரிழப்பு

image

தஞ்சாவூர் கீழவாசல் பகுதியை சேர்ந்தவர் டீ வியாபாரி கணேசன் (48). இவர் கடந்த 4ஆம் தேதி வீட்டில் டீ போடுவதற்காக ஸ்டவ் அடுப்பை பற்ற வைத்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஸ்டவ் வெடித்ததில் கணேசன் படுகாயம் அடைந்து மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று கணேசன் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!