News January 1, 2026
இனிமேல் மீன் சாப்பிட்டா முள் குத்தாது!

மீன் பிடிக்கும் என்றாலும், பலரும் அதை சாப்பிட யோசிப்பதற்கு காரணம் அதில் இருக்கும் முள்! அதிலும், சீனர்கள் சாப்பிடும் சில மீன் வகைகளில் சுமார் 80 முட்கள் இருக்குமாம். இதனால், முள் இல்லாத மீன்களை பண்ணைகளில் வளர்க்கும் முயற்சியில் 6 ஆண்டுகளாக போராடி வந்த சீன விஞ்ஞானிகள், தற்போது அதில் வெற்றி கண்டுள்ளனர். runx2b என்ற மீன்களின் ஜீன்களில் மாற்றங்களை ஏற்படுத்தி இதனை சாத்தியமாக்கியுள்ளனர்!
Similar News
News February 2, 2026
சரிவில் இருந்து மீண்ட ரூபாய்!

டாலருக்கு எதிராக கடந்த சில நாள்களாக சரிவை சந்தித்து வந்த ரூபாய் இன்று புத்துயிர் பெற்றுள்ளது. அமெரிக்க டாலருக்கு எதிரான வர்த்தகத்தில், 42 பைசா உயர்ந்து ₹91.53-ஆக உள்ள பாயின் மதிப்பு உள்ளது. RBI-ன் அறிவுறுத்தலின் பேரில் பொதுத்துறை வங்கிகள் டாலர்களை விற்றதன் மூலம் இது மீண்டது. மேலும், கடந்த 6 வாரங்களில் இத்தகைய குறிப்பிடத்தக்க உயர்வு ஒரே நாளில் பதிவாகி இருப்பது இதுவே முதல்முறை.
News February 2, 2026
சீனா ஆக்கிரமிப்பை பற்றி பேச ராகுலுக்கு அனுமதி மறுப்பு!

இந்தியாவின் பெரும் பகுதிகளை சீனா ஆக்கிரமித்துள்ளதாக ராகுல் காந்தி பார்லிமெண்ட்டில் குற்றஞ்சாட்டினார். ஓய்வுபெற்ற ராணுவத் தளபதி MM நரவனேவின் சுயசரிதை புத்தகத்தை மேற்கோள்காட்டி ராகுல் பேச, வெளியிடப்படாத புத்தகத்தை அடிப்படையாக கொண்டு பேசக் கூடாதென சபாநாயகர் அனுமதி மறுத்தார். அத்துடன் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டதால் அவை ஒத்திவைக்கப்பட்டது.
News February 2, 2026
டிகிரி போதும்.. ₹48,480 சம்பளம்.. இன்றே கடைசி

யூகோ வங்கியில் 173 Generalist and Specialist Officers பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன *B.E/B.Tech, MBA, CA, M.Sc, MCA முடித்திருக்க வேண்டும் *20- 35 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும் *எழுத்துத் தேர்வு, குழு விவாதம் & நேர்காணல் மூலம் தேர்ச்சி நடைபெறும் *₹48,480 – ₹93,960 வரை சம்பளம் *விண்ணப்பிப்பதற்கு இன்றே கடைசி நாளாகும். *விண்ணப்பிக்க <


