News January 1, 2026
நாகை: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

நாகை மக்களே.., வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News January 7, 2026
நாகை: போதைப் பொருள் பதுக்கியவர் கைது

நாகை மாவட்டம், வாய்மேடு காவல் நிலைய பொறுப்பு ஆய்வாளர் நாகரத்தினம் மற்றும் போலீசார் நேற்று மருதூர் மாடிக் கடை என்ற இடத்தில் சோதனை நடத்தினர். அப்போது ராமதாஸ் (25) என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சட்டவிரோதமாக விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. அதையடுத்து போலீசார் 45 கிலோ குட்கா புகையிலை பொருட்களை கைப்பற்றி ராமதாஸை கைது செய்தனர்.
News January 7, 2026
நாகை: கடத்தல் காரர்கள் அதிரடி கைது

நாகை எஸ்.பி.பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் வேளாங்கண்ணி போலீசார் நேற்று இரவு மாணிக்கப்பங்கு என்ற இடத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 3 இருசக்கர வாகனங்களில் ரூ.50,000 மதிப்புள்ள 700 புதுவை மாநில சாராய பாட்டில்களை கடத்தி வந்த பாண்டியன், கிருபாநிதி ஆகிய இருவரையும் போலீசார் செய்தனர். இதையடுத்து மதுபாட்டில்கள் மற்றும் 3 டூவிலர்களை பறிமுதல் செய்த போலீசார், தப்பி ஓடிய ஒரு வாலிபரை தேடி வருகின்றனர்.
News January 7, 2026
நாகை: வேலை வாய்ப்பு முகாம் அறிவிப்பு

நாகை மாவட்ட நிர்வாகம் மற்றும் வேலைவாய்ப்பு மையம் சார்பில், வரும் ஜன.10-ம் தேதி, காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம், நாகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. இதில் 18 முதல் 35 வயதுடைய, 8-வது முதல் பட்டப்படிப்பு வரை படித்தவர்கள் பங்கேற்கலாம் நாகை மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார்.


