News May 2, 2024

விராட் கோலி பார்ம் குறித்து சந்தேகமில்லை

image

விராட் கோலியின் பார்ம் குறித்து எந்த சந்தேகமும் இல்லை என்று கேப்டன் ரோஹித் ஷர்மாவும், தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கரும் தெரிவித்துள்ளனர். செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், கோலி நல்ல பார்மில் இருப்பதாகவும், ஐபிஎல்லில் 500 ரன்கள் வரை குவித்திருப்பதாகவும் தெரிவித்தனர். கோலியுடன் இணைந்து ஓப்பனிங் களமிறங்குவீர்களா என்ற கேள்விக்கு, சூழ்நிலைக்குத் தகுந்தபடி முடிவெடுக்கப்படும் என்றார் ரோஹித்.

Similar News

News March 20, 2026

போரால் அழிவு.. இழப்பீடு கேட்கும் ஈரான்

image

தங்களது நாட்டில் ஏற்பட்ட அனைத்து சேதங்களுக்கும் UAE-க்கும் பொறுப்பு உள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. ஈரான் மீது தாக்குதல் நடத்த US படைகளுக்கு தனது நிலப்பரப்பை பயன்படுத்த UAE அனுமதித்ததாகவும் குற்றஞ்சாட்டி இருக்கிறது. எனவே, அந்நாடு உரிய இழப்பீட்டை வழங்கவேண்டும் என ஐநா பொதுச் செயலாளருக்கு கடிதம் மூலமாக ஈரான் வலியுறுத்தியுள்ளது.

News March 20, 2026

ராசி பலன்கள் (20.03.2026)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை ஷேர் பண்ணுங்க!

News March 20, 2026

அன்புமணி, TTV அவசர டெல்லி பயணம்

image

NDA கூட்டணி தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடிக்கும் நிலையில், டெல்லியில் அமித்ஷாவை EPS நேரில் சந்தித்துள்ளார். இந்நிலையில் கூட்டணி தலைவர்களான அன்புமணி, TTV தினகரன் ஆகியோரும் நாளை டெல்லி சென்று அமித்ஷாவை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது, தொகுதிப் பங்கீடு இறுதிசெய்யப்பட்டு முக்கிய அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

error: Content is protected !!