News January 1, 2026
போனில் Radiation எவ்வளோ இருக்குனு தெரிஞ்சிக்கோங்க!

போன்களிலிருந்து வெளிவரும் Radiation நமது உடலுக்கு ஆபத்து எனக் கூறப்படுகிறது. ஆனால், பலருக்கும் அவர்களது போனில் எவ்வளவு Radiation இருக்கிறது என்பது தெரிவதில்லை. அதை Specific Absorption Rate (SAR) மூலம் கண்டறியலாம். போனின் யூசர் Manual அல்லது நிறுவனத்தின் இணையதளத்தில் Radiation அளவு குறிப்பிடப்பட்டிருக்கும். அல்லது போனில் *#07# டயல் செய்து பாருங்க. உங்க போனில் எவ்வளவு Radiation இருக்கு?
Similar News
News February 9, 2026
சற்றுமுன்: விஜய் அவசர அறிவிப்பு

தவெக மா.செ.,க்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாக விஜய் திடீரென அறிவித்துள்ளார். நாளை காணொலி வாயிலாக ஆலோசனை நடைபெற உள்ள ஆலோசனையில், மா.செ.,க்களுடன் விஜய் தனித்தனியே பேச உள்ளதாக கூறப்படுகிறது. அப்போது, ஒவ்வொரு தொகுதியிலும் தவெகவுக்கு உள்ள பலம் மற்றும் பலவீனம் குறித்து அவர் கேட்டு தெரிந்துகொள்ள உள்ளாராம். மேலும், தேர்தல் பணிகளை துரிதப்படுத்துவது தொடர்பான அறிவுரைகளையும் விஜய் வழங்க உள்ளார்.
News February 9, 2026
வருங்கால சந்ததியினருக்கான நார்வேயின் சூப்பர் பிளான்!

1969-ல் வட கடலில் கண்டுபிடிக்கப்பட்ட கச்சா எண்ணெய் வளத்தை நார்வே மிகவும் வித்தியாசமாக பயன்படுத்தியுள்ளது. எண்ணெய் வருமானத்தை செலவழிக்காமல், வருங்கால சந்ததியினருக்காக சேமித்து, அதை உலகெங்கிலும் முதலீடு செய்வதற்காக Government Pension Fund Global என்ற நிதி நிறுவனத்தை உருவாக்கியது. இன்று இந்த நிறுவனத்தின் மதிப்பு ₹180 லட்சம் கோடியாக உள்ளது. இந்த நிதி ஓய்வூதிய செலவுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.
News February 9, 2026
பள்ளி மாணவி 5 மாத கர்ப்பம்.. அதிர்ச்சித் தகவல்

தோளில் புத்தகப்பையை சுமக்கும் வயதில் வயிற்றில் குழந்தையை சுமப்பது எத்தகைய அவலம்? குளித்தலை அருகே வயிற்று வலியால் அவதிப்பட்ட +1 மாணவியை பெற்றோர் ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் சென்றபோது, சிறுமி 5 மாத கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. அப்பகுதியில் டீ மாஸ்டராக இருக்கும் அஜித்(27), மாணவியிடம் ஆசைவார்த்தைக் கூறி அத்துமீறியதே இதற்கு காரணம். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில் இப்போது அஜித் கம்பி எண்ணுகிறார்.


