News January 1, 2026
புதுவை: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும், பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க…
Similar News
News January 11, 2026
புதுவை: போலீஸ் தகுதித்தேர்வில் 336 பெண்கள் தேர்வு

புதுவை காவல் துறையில் காலியாக உள்ள போலீஸ் பணிக்கு, கோரிமேடு ஆயுதப் படை மைதானத்தில் உடல் தகுதித்தேர்வு நடந்து வருகிறது. நேற்று 9-வது நாளாக பெண் போலீஸ் பணிக்கான உடல் தகுதிதேர்வுக்கு 1,000 பெண்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவர்களில் 618 பேர் பங்கேற்றனர். முதலில் அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கப்பட்டன. அதன்பின் உடல் தகுதித்தேர்வு நடத்தப்பட் டது.இதில் 336 பேர் எழுத்துத்தேர்வுக்கு தகுதி பெற்றனர்.
News January 11, 2026
புதுச்சேரி: இந்த கோயில் சென்றால் வெற்றி நிச்சயம்!

புதுச்சேரியில் மிகவும் பிரபலமான கோயில்களில் மணக்குள விநாயகர் கோயிலும் ஒன்று, இந்த கோயிலுக்குச் சென்றால் தடைகள் நீங்கும், ஞானம், வெற்றி, செழிப்பு கிடைக்கும், மன அமைதி உண்டாகும், புதிய முயற்சிகளுக்கு நல்ல தொடக்கம் கிடைக்கும், குழந்தை பாக்கியம், குடும்பத்தில் மகிழ்ச்சி போன்ற பல நன்மைகளை பெறலாம். இங்குள்ள விநாயகரின் அருள் மிகுந்த ஆற்றல் வாய்ந்ததாக நம்பப்படுகிறது. தெரியாதவங்களுக்கு SHARE பண்ணுங்க.
News January 11, 2026
புதுவையில் SI தேர்வுக்கு 16,473 விண்ணப்பம் ஏற்பு

புதுவை காவல்துறை தலைமையக சிறப்பு அதிகாரி ஏழுமலை இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புதுவை காவல்துறையில் காலியாக உள்ள SI பணியிடங்களை நிரப்ப 12.8.25-யில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் மொத்தம் 18,205 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. ஆள்சேர்ப்பு குழுவால் பரிசீலிக்கப்பட்டபின் 16,473 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.


