News January 1, 2026

ராணிப்பேட்டை: அரசின் முக்கிய எண்கள்!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377

2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500

3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090

4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098

5.முதியோருக்கான அவசர உதவி -1253

6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033

7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க

Similar News

News January 15, 2026

ராணிப்பேட்டையில் TNPSC Group 2 தேர்விற்கான மாதிரி தேர்வு

image

ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் TNPSC Group 2 தேர்விற்கான மாநில அளவிலான இலவச மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜனவரி 21,24, 31 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் இந்த தேர்வு நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்புவோர் 04172291400 எண்ணை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

News January 15, 2026

ராணிப்பேட்டை: போதையில் கணவன் வெறிச்செயல்!

image

கலவையை சேர்ந்த மரம் வெட்டும் தொழிலாளி ஆறுமுகம் (65). இவர் நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் வீட்டில் போதையில் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார். அப்போது ஆத்திரம் அடைந்த ஆறுமுகம் கத்தியால் மனைவியின் கையை வெட்டினார். இதனால் வலியால் அலறி துடித்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு அடுக்கம்பாறை மருத்துவமனையில் சேர்த்தனர். இதையடுத்து போலீசார் ஆறுமுகத்தை கைது செய்தனர்.

News January 15, 2026

ராணிப்பேட்டை: தாய் தூக்கிட்டு தற்கொலை!

image

வளையாத்தூர் கிராமம், அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் யோகலட்சுமி. இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். நேற்று (ஜன.14) குடும்ப பிரச்சினையினால் மனமுடைந்த இவர் வீட்டில் தூக்குமாட்டி உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இவரை வீட்டில் இருந்தவர்கள் மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து கலவை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!