News May 2, 2024

கவின் படத்தை தயாரிக்கும் நெல்சன்

image

இயக்குநர் நெல்சன், கவின் நடிக்கும் புதிய படத்தை தயாரிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ‘ஃபிளெமென்ட் பிக்சர்ஸ்’ என்கிற படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ள நெல்சன், நல்ல கதையம்சம் கொண்ட படங்களைத் தயாரிக்க உள்ளதாகக் கூறியிருந்தார். மேலும், மே 3ஆம் தேதி முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவித்திருந்தார். கவின் நடிக்கும் படம் தொடர்பாக நாளை அதிகாரப்பூர்வமாக அவர் அறிவிக்க உள்ளார்.

Similar News

News March 19, 2026

பள்ளிகளுக்கு கூடுதல் விடுமுறை.. மாணவர்கள் HAPPY

image

தேர்தல் காரணமாக பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிக்க அரசு முடிவு செய்துள்ளது. 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்.24 வரை முழு ஆண்டு தேர்வுகள் நடத்த முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. ஏப்.23-ல் தேர்தல் நடைபெற இருப்பதால், முன்கூட்டியே (ஏப்.17-க்குள்) முழு ஆண்டுத் தேர்வுகளை முடிக்க தற்போது ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறதாம். இதனால், மாணவர்களுக்கு மேலும் ஒரு வாரம் கோடை விடுமுறை கிடைக்கும். SHARE IT

News March 19, 2026

இன்னும் அமித்ஷா நேரம் ஒதுக்கல: EPS

image

அதிமுக – பாஜக தொகுதிப் பங்கீடு உடன்படிக்கை இதுவரை எட்டப்படாத நிலையில் EPS டெல்லி சென்றுள்ளார். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமித்ஷாவைச் சந்திக்க நேரம் கேட்டுள்ளதாகவும், ஆனால் இன்னும் நேரம் ஒதுக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும், டெல்லிக்கு வந்ததன் நோக்கத்தை நாளை கூறுகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார். கடந்த 3 மாதங்களில் 3-வது முறையாக EPS டெல்லி சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

News March 19, 2026

BREAKING: தங்கம் விலை மிகப் பெரிய அளவில் குறைந்தது

image

தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ₹5,360 குறைந்து நகைப் பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. 22 கேரட் தங்கம் காலையில் சவரனுக்கு ₹2,160 சரிந்த நிலையில், மாலையில் மேலும் ₹3,200 குறைந்துள்ளது. சென்னையில் தற்போது, 1 கிராம் ₹13,900-க்கும், 1 சவரன் ₹1,11,200-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேநேரம், வெள்ளி விலை மாலையிலும் மாற்றமின்றி கிலோ ₹2.65 லட்சத்திற்கு விற்பனையாகி வருகிறது.

error: Content is protected !!